வெஸ்ட் இண்டிஸ்க்கு எதிரான இந்திய ஒருநாள், டி20அணி அறிவிப்பு- ஷாருக்கானுக்கு இடமில்லை, அணி விவரம் இதோ

மும்பை: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ரோகித் சர்மா அணிக்கு திரும்பியுள்ளார்.

சீனியர் வீரர்களான கோலி, ராகுல் இந்த தொடரில் விளையாடுகின்றனர் ஆனால் அஸ்வின், பும்ரா, ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

IND vs SA 3rd ODI – இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள்..!! டாசில் சரியான முடிவு எடுத்தாரா ராகுல்?IND vs SA 3rd ODI – இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள்..!! டாசில் சரியான முடிவு எடுத்தாரா ராகுல்?

ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோர் இன்னும் காயத்திலிருந்து குணமடைய வில்லை. பிப்ரவரி 6ஆம் தேதி முதல் ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது. அதன் பிறகு டி20 போட்டிகள் 16ஆம் தேதி தொடங்குகிறது.

முதல் வாய்ப்பு

முதல் வாய்ப்பு

ரோகித் சர்மா தலைமையிலான ஒருநாள் அணியில், அறிமுக வீரராக ரவி பிஸ்னாய் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுழற்பந்துவீச்சாளரான இவர் U 19 உலகக் கோப்பையில் கலக்கி, ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடியவர். காயம் காரணமாக ஓய்வில் இருந்த குல்தீப் யாதவ் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார். ராஜஸ்தான் வீரர் தீபக் ஹூடாவுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.ருத்துராஜ் கெய்க்வாடும் இடம்பெற்றுள்ளார்.

ஒருநாள் அணி

ஒருநாள் அணி

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ருத்துராஜ், ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தீபக் சாஹர், சர்துல் தாக்கூர், சாஹல்,குல்தீப் யாதவ், வாசிங்டன் சுந்தர், ரவி பிஸ்னாய், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஷாருக்கானுக்கு இடமில்லை

ஷாருக்கானுக்கு இடமில்லை

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடர் வரும் 16ஆம் தேதி தொடங்குகிறது. இதில் தமிழக வீரர் ஷாரூக்கான் இடம்பெறவில்லை.காயத்திலிருந்து குணமடைந்துள்ள அக்சர் பட்டேல் அணிக்கு திரும்பியுள்ளார். இந்த தொடரிலும் ரவி பிஸ்னாய் சேர்க்கப்பட்டுள்ளார்.ஒருநாள் தொடரில் இடம்பெறாத வெங்கடேஷ் ஐயர் டி20 போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார்.இஷான் கிஷன் டி20 போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ருத்துராஜ் கெய்க்வாட் இடம்பெறவில்லை.

India ODI, T20I Squads vs WI: Rohit to lead, Kuldeep, Bishnoi get call | OneIndia Tamil
டி20 அணி விவரம்

டி20 அணி விவரம்

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், இஷான் கிஷன்,விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், ரவி பிஸ்னாய், அக்சர் பட்டேல், சாஹல், வாசிங்டன் சுந்தர், முகமது சிராஜ், புவனேஸ்வர் குமார், அவேஷ் கான், ஹர்சல் பட்டேல்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
India ODI. T20 squad announced for WI series, Rohit, Kuldeep returnsவெஸ்ட் இண்டிஸ்க்கு எதிரான இந்திய ஒருநாள், டி20அணி அறிவிப்பு- ஷாருக்கானுக்கு இடமில்லை, அணி விவரம் இதோ
Story first published: Wednesday, January 26, 2022, 23:26 [IST]
Other articles published on Jan 26, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X