For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி ரெடி!!.. ப்ளானை முடித்த பாகிஸ்தான்.. புதிய தொடர் உதயமாகிறதா?

சென்னை: இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மீண்டும் தனிப்பட்ட தொடர்களில் மோதிக்கொள்ள, பாகிஸ்தான் அணி நிர்வாகம் முன்னெடுப்பு எடுத்துள்ளது.

Recommended Video

மீண்டும் Ind vs Pak தொடர் நடக்குமா? ICC-யிடம் PCB வைத்த கோரிக்கை

அரசியல் ரீதியான பிரச்சினைகள் காரணமாக இரு அணிகளும் ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே மோதி வருகின்றன.

3வது டெஸ்டில் சீண்டிய ரபாடா.. 3 வருடமாக மறைத்து வைத்த ஆயுதத்தை எடுத்த விராட் கோலி.. தரமான பதிலடி 3வது டெஸ்டில் சீண்டிய ரபாடா.. 3 வருடமாக மறைத்து வைத்த ஆயுதத்தை எடுத்த விராட் கோலி.. தரமான பதிலடி

அதிக ரசிகர்களால் பார்க்கப்படும் இந்த இரு அணிகளின் போட்டிகளை ஏன் ஆண்டிற்கு ஒருமுறையாவது நடத்தக்கூடாது என ரசிகர்கள் நீண்ட நாட்களாக கோரி வருகின்றனர்.

 பாகிஸ்தானின் முன்னெடுப்பு

பாகிஸ்தானின் முன்னெடுப்பு

இந்நிலையில் அந்த கோரிக்கைகளுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஐசிசி-யிடம் முக்கிய முன்னெடுப்பை எடுத்துள்ளது. அதாவது, 4 நாடுகள் மோதிக்கொள்ளும் வகையில் ஆண்டு தோறும் ஒரு தனிப்பட்ட டி20 தொடரை நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும்.

தொடர் விவரங்கள்

தொடர் விவரங்கள்

இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஷ் ராஜா, 4 அணிகளும், ஒவ்வொரு ஆண்டில் இந்த தொடரை தொகுத்து வழங்கலாம் எனக்கூறியுள்ளார். மேலும் வருமானத்திலும் சரியான சதவீத முறை வைத்து பிரித்துக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது. இதற்கு ஐசிசி ஒப்புதல் அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முதல் முறை அல்ல?

முதல் முறை அல்ல?

இந்த 4 அணிகள் மட்டும் மோதும் தனிப்பட்ட தொடர்கள் ஏற்கனவே நடைபெற்றுள்ளது. 1985ம் ஆண்டு சார்ஜாவில் நடைபெற்ற "ரோத்மேன்ஸ் ஃபோர் நேஷன் கப்" என்ற தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதியுள்ளன. அதன் பிறகு 1987ம் ஆண்டில் சார்ஜா கோப்பையில் மோதியுள்ளன. இதன் இறுதிப்போட்டியில் கூட இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியிருந்தது.

90களில் நடந்த போட்டி

90களில் நடந்த போட்டி

இதன் பிறகு 90 காலக்கட்டங்களில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் மட்டும் தொடர்ச்சியாக பல்வேறு தொடர்களில் மோதி வந்தன. சிங்கர்ஸ் வேர்ல்ட் சீரிஸ், கோகோ கோலா கப், அகாய் சிங்கர் சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் கார்ல்டான் & யுனைடெட் சீரிஸ் என பல தொடர்களில் மோதியுள்ளன. தற்போது மீண்டும் அவற்றினை கொண்டு வர தான் பாகிஸ்தான் முன்வந்துள்ளது.

பிசிசிஐ சம்மதிக்குமா

பிசிசிஐ சம்மதிக்குமா

ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் இதற்கு சம்மதிக்குமா என்பது சந்தேகமே. ஏற்கனவே கடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தியவுடன் தனிப்பட்ட தொடர் நடைபெறுமா என்ற பேச்சுக்கள் அதிகமாகின. ஆனால் என்ன ஆனாலும் நடைபெறாது என பிசிசிஐ கண்டிப்புடன் தெரிவித்துவிட்டது. இதனால் பாகிஸ்தானின் தற்போதைய கோரிக்கையை ஏற்குமா என்பதும் சந்தேகமே.

Story first published: Wednesday, January 12, 2022, 12:01 [IST]
Other articles published on Jan 12, 2022
English summary
India Pakistan T20 Tournament Ready?, PCB’s chairman Ramiz Raja proposes to ICC for a quadrangular T20 league involving IND, PAK, ENG & AUS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X