For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் ரிலீஸ்..!! மரண மாஸ் காட்டிய இந்தியா..!! எப்படி நடந்தது?

Recommended Video

india places top on icc test championship ranking list

துபாய்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில், இந்திய அணி முதலிடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிதான் ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஷிப் முதல் போட்டி. அடுத்த 2 ஆண்டுகளுக்கு நடக்கும் டெஸ்ட் போட்டிகள் அனைத்துமே டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள்தான்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில், டெஸ்ட் தொடருக்கு மொத்தமாக 120 புள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட தொடரில் எத்தனை போட்டிகள் நடக்கிறதோ (உதாரணமாக 2 போட்டிகள் என்றால் 2) அந்த நம்பரால் 120ஐ வகுக்க வேண்டும். அப்படி வகுத்தால் கிடைக்கும் கிடைக்கும் பாயிண்ட் தான், ஒரு போட்டியில் அடையும் வெற்றிக்கான பாயிண்ட் ஆகும்.

புள்ளிகளின் அடிப்படை

புள்ளிகளின் அடிப்படை

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் தொடர் 2 போட்டிகள் கொண்ட தொடர். எனவே ஒரு போட்டியில் வென்றால் கிடைப்பது 60 புள்ளிகள். அதன் அடிப்படையில், வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. எனவே, 60 புள்ளிகளை பெற்று இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்தியா முதலிடம்

இந்தியா முதலிடம்

நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை, முதல் போட்டியில் வென்று 60 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. அந்த அணியை தற்போது பின்னுக்குத்தள்ளி இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது.

தலா ஒரு போட்டி

தலா ஒரு போட்டி

ஆஷஸ் தொடர் 5 போட்டிகள் கொண்ட தொடர். ஆகவே ஒரு போட்டியில் வென்றால் கிடைப்பது 24 புள்ளிகள். அந்த வகையில் பார்த்தால், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் ஜெயித்திருக்கின்றன.

மற்ற இடங்கள் யாருக்கு?

மற்ற இடங்கள் யாருக்கு?

இரு அணிகளும் 24 புள்ளிகளை பெற்றுள்ளன. ஒரு போட்டி டிரா. ஆகையால் இரு அணிகளுக்கும் தலா 12 புள்ளிகள் வழங்கப்பட்டன. இரு அணிகளுமே 32 புள்ளிகளுடன் 3 மற்றும் 4ம் இடத்தில் உள்ளன. அதாவது ஆஸ்திரேலியாவுக்கு 3ம் இடம். இங்கிலாந்துக்கு 4ம் இடம்.

Story first published: Tuesday, August 27, 2019, 10:24 [IST]
Other articles published on Aug 27, 2019
English summary
India places top on ICC test ranking list.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X