For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணிக்கு வந்த நெருக்கடி.. சீனியர் வீரருக்கு எதிராக திட்டம்.. பின்னால் இருப்பது விராட் கோலியா?

சவுத்தாம்டன்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு நெருக்கடியான சூழல் நிலவி வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

WTC ஃபைனலில் சொதப்பினாலும்.. எகிறும் ரிஷப் பண்ட் சொத்து மதிப்பு.. 4 ஆண்டுகளில் அசுர வளர்ச்சிWTC ஃபைனலில் சொதப்பினாலும்.. எகிறும் ரிஷப் பண்ட் சொத்து மதிப்பு.. 4 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி

இதனால் அடுத்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அணியில் தேவையான மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என திட்டமிடப்பட்டு வருகிறது.

இங்கிலாந்து தொடர்

இங்கிலாந்து தொடர்

இந்திய அணி வரும் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்திய அணிக்கு அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியாக இது உள்ளது. எனவே இதில் வெற்றி பெறுவதற்கு அணியில் என்னென்ன செய்ய வேண்டும் என்ற பேச்சுக்கள் எழத்தொடங்கியுள்ளது.

இந்தியாவுக்கு நெருக்கடி

இந்தியாவுக்கு நெருக்கடி

இதில் அணியின் மற்ற பிரச்னைகளை தவிர்த்து புஜாராவை வெளியில் உட்காரவைக்க வேண்டும் என்ற கருத்து தான் வலுத்து வருகிறது. இதற்கு காரணம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அவரின் மோசமான செயல்பாடு தான். மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்ட இந்த போட்டியில் அவர் முதல் இன்னிங்ஸில் 8 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

உட்காரவைக்க திட்டம்

உட்காரவைக்க திட்டம்

இதன் காரணமாக புஜாரவை அணியில் இருந்து வெளியேற்ற இந்திய அணி திட்டமிட்டு வருகிறது. தற்போது வரை முதல் விக்கெட்டிற்கு புஜாரா களமிறங்கி வருவதால், கேப்டன் விராட் கோலி 4வது வீரராக களமிறங்குகிறார். புஜாரா வெளியில் சென்றால் கோலி மீண்டும் தனது இடத்திற்கே வந்துவிடுவார். மேலும் 4வது இடத்திற்கு கே.எல்.ராகுல் அல்லது ஹனுமா விஹாரியை கொண்டு வர திட்டங்கள் போடப்பட்டு வருகிறது.

புள்ளி விவரங்கள்

புள்ளி விவரங்கள்

கடந்த 2020ம் ஆண்டிற்கு முன்னர் வரை 49.48 ஆக இருந்த புஜாராவின் சராசரி ரன் விகிதம் 2020ம் ஆண்டில் இருந்து 26.35 ஆக சரிந்துள்ளது. அவர் கடைசியாக விளையாடிய 30 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அதிகபட்சமாக ஆஸ்திரேலிய தொடரில் 77 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, June 26, 2021, 21:36 [IST]
Other articles published on Jun 26, 2021
English summary
After the poor perfomance in WTC Final, India Planning on benching Cheteshwar Pujara for the England series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X