For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11..அடித்துக்கொள்ளும் 7 வீரர்கள்.. ராகுலின் இறுதி முடிவு!

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்காக இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் பெரும் சண்டை நடந்து வருகிறது.

டெஸ்ட் தொடரை 1 - 2 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி, ஒருநாள் போட்டிகளில் பதிலடி கொடுக்க காத்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் புதிய ரெக்கார்ட் ரெடி!! இளம் வீரரை வாங்க பல கோடிகளை இறக்கும் 3 அணிகள் - காரணம்? ஐபிஎல் வரலாற்றில் புதிய ரெக்கார்ட் ரெடி!! இளம் வீரரை வாங்க பல கோடிகளை இறக்கும் 3 அணிகள் - காரணம்?

இதற்காக கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்வதில் பல கட்ட ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

 ஓப்பனிங்கிலேயே குழப்பம்

ஓப்பனிங்கிலேயே குழப்பம்

ரோகித் சர்மா காயம் காரணமாக விலகியதால் கே.எல்.ராகுலுடன் ஓப்பனிங் களமிறங்க ஷிகர் தவான், ருதுராஜ் கெயிக்வாட், இஷான் கிஷான் என 3 தேர்வுகள் உள்ளன. இதில் சீனியர் வீரர் ஷிகர் தவானுக்கு தான் வாய்ப்புகள் கிடைக்கும் எனத் தெரிகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தவானின் பேட்டிங் சிறப்பாக இருந்துள்ளதால் அவரை தேர்வு செய்யவே கே.எல்.ராகுல் திட்டமிட்டுள்ளார். இதனால் இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் இஷான் கிஷானின் காத்திருப்பு நீள்கிறது.

 4வது இடம் யாருக்கு

4வது இடம் யாருக்கு

வழக்கம் போல விராட் கோலி முதல் விக்கெட்டிற்கு களமிறங்க 4வது வீரராக யார் களமிறங்குவார் என்பதில் தான் பெரும் குழப்பம் நீடிக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டிருந்த காலத்தில் அவரின் இடத்தில் சூர்யகுமார் யாதவ் விளையாடி வந்தார். ஆனால் தற்போது ஸ்ரேயாஸ் முழு உடற்தகுதியுடன் இருப்பதால் சூர்யகுமாரின் வாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது. டெஸ்ட் தொடரிலேயே வாய்ப்பு கொடுக்காததால், நிச்சயம் ஒருநாள் தொடரில் ஸ்ரேயாஸுக்கு டிராவிட் வாய்ப்பு தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 2 சுழற்பந்துவீச்சாளர்கள்

2 சுழற்பந்துவீச்சாளர்கள்

ரவீந்திர ஜடேஜா காயத்தால் விலகியுள்ளதால் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 ஆண்டுகளுக்கு பின்பு ஒருநாள் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்கவுள்ளார். அவருக்கு உறுதுணையாக 2வது ஸ்பின்னரும் இணைக்கப்படவுள்ளார். இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் 4வது வேகப்பந்துவீச்சாளராக இருக்க முடியும் என்பதால் சுழற்பந்துவீச்சில் யுவேந்திர சஹால் கம்பேக் கொடுக்க எந்தவித தடையும் இல்லை.

 3 வேகப்பந்துவீச்சாளர்கள்

3 வேகப்பந்துவீச்சாளர்கள்

துணைக்கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் முதன்மை தேர்வாக உள்ளனர். 3வது இடத்திற்காக தான் தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் போட்டி போட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலும் சிராஜுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

கே.எல்.ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் / சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர், அஸ்வின், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுவேந்திர சாஹல், முகமது சிராஜ்/ தீபக் சஹார்

Story first published: Monday, January 17, 2022, 19:29 [IST]
Other articles published on Jan 17, 2022
English summary
India Playing 11 for 1st ODI ( முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11) = தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான ப்ளேயிங் 11ஐ தேர்வில் செய்வதில் கேப்டன் கே.எல்.ராகுல் குழப்பமடைந்துள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X