“அவர் முழு உடற்தகுதி பெற்றார்” முதல் ஒருநாள் போட்டிக்கு வரும் முக்கிய வீரர்.. பும்ரா தந்த அப்டேட்!

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முக்கிய வீரர் காயத்தில் இருந்து மீண்டு கம்பேக் கொடுக்கவுள்ளதாக பும்ரா கூறியுள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் ஜனவரி 19ம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்..? போட்டியில் 4 வீரர்கள்..!! பி.சி.சி.ஐ. அவசர ஆலோசனைஇந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்..? போட்டியில் 4 வீரர்கள்..!! பி.சி.சி.ஐ. அவசர ஆலோசனை

டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்த இந்திய அணி, ஒருநாள் போட்டி தொடரில் அதற்கு பழிவாங்கும் முனைப்புடன் உள்ளது.

முதல் போட்டி

முதல் போட்டி

இந்திய அணியின் ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்வதில் தான் குழப்பம் நீடித்து வருகிறது. பேட்டிங் வரிசையில் 4வது இடத்திற்கு சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் இடையேயான போட்டி மற்றும் பவுலிங் தேர்வுகளில் தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர் என ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

முக்கிய வீரர் கம்பேக்

முக்கிய வீரர் கம்பேக்

இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் கம்பேக் கொடுக்கவுள்ளதாக துணைக்கேப்டன் பும்ரா தெரிவித்துள்ளார். 2வது டெஸ்ட் போட்டியின் போது காலில் தசைப்பிடிப்பு காரணமாக வெளியேறிய முகமது சிராஜ் 3வது டெஸ்டில் இருந்து விலகினார். இதனால் ஒருநாள் போட்டியில் அவர் பங்கு பெறுவாரா என்ற குழப்பம் நீடித்தது. ஆனால் பும்ராவின் பதில் தற்போது ரசிகர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.

உடல்நிலை

உடல்நிலை

இதுகுறித்து பேசிய அவர், முகமது சிராஜ் முழு உடற்தகுதியுடன் உள்ளார். எங்களுடன் தான் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவரிடம் எந்தவித பிரச்சினைகளையும் நான் பார்க்கவில்லை. அவர் இடம்பெறுவார் என்று தான் நினைக்கிறேன். அணியில் அனைத்து வீரர்களுமே தற்பொது நல்ல உடற்தகுதியுடன் உள்ளனர். இதனால் ப்ளேயிங் 11ல் பெரும் மாற்றங்கள் இருக்காது என நினைக்கிறேன் எனத் தெரிவித்தார்.

ரசிகர்கள் நிம்மதி

ரசிகர்கள் நிம்மதி

தென்னாப்பிரிக்கா களங்களில் நன்கு வேகமும், பவுன்சர்களும் போடக்கூடிய பவுலர்களே தேவை. அந்தவகையில் இந்திய அணியில் சிராஜுக்கு அடுத்தபடியாக ஷர்துல் தாக்கூர் மற்றும் தீபக் சஹார் மட்டுமே உள்ளனர். அவர்களை விட முகமது சிராஜுக்கு பந்து நன்கு ஸ்விங் ஆகும் என்பதால் இந்திய அணிக்கு கூடுதல் பலம் ஏற்பட்டுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Team India's Star player recoverd from injury, will make a comeback for 1st ODI Against South africa, Vice captain bumrah gives a update
Story first published: Monday, January 17, 2022, 18:22 [IST]
Other articles published on Jan 17, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X