For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவின் டூபிளஸிஸ் ஜடேஜா.. ரசிகர்கள் செம கடுப்பு!

லண்டன்: இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் நமது முன்னணி பேட்ஸ்மென்கள் மோசமாக சொதப்பிய நிலையில் கடைசி வரிசையில் கலக்கினார் ஹர்டிக் பாண்ட்யா. ஆனால் ரவீந்திர ஜடேஜாவின் சுயநலத்தால் அவர் மோசமாக ரன் அவுட் செய்யப்பட்டார்.

பாண்ட்யா விளையாடிய விதத்தைப் பார்த்தபோது இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. அட, இவர் கரை சேர்த்து விடுவாரோ என்ற புது ஒளி தெரிந்தது. ஆனால் அதில் பெட்ரோலை ஊற்றி தீயை வைத்துக் கொளுத்தி விட்டார் ஜடேஜா.

மிக மோசமான முறையில் பாண்ட்யா ரன் அவுட் செய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்க ஜடேஜாவின் சுயநலமே காரணம். ரசிகர்கள் அத்தனை பேரும் ஜடேஜாவின் செயலால் கொதிப்படைந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா மாதிரியே

தென் ஆப்பிரிக்கா மாதிரியே

இதே சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், நேற்று நடந்ததைப் போலவே இந்தியா - தென் ஆப்பிரிக்க போட்டியிலும் ரன் அவுட் கூத்து நடந்தேறியது. அதில் ஈடுபட்ட பிரகஸ்பதிகள் டூபிளஸிஸும், டேவிட் மில்லரும்.

டூபிளஸிஸ் செய்த குழப்பம்

டூபிளஸிஸ் செய்த குழப்பம்

தென் ஆப்பிரிக்க அணியின்போது 29வது ஓவரில் இந்த காமெடி நடந்தது. அப்போது அஸ்வின் பந்து வீசினார். மில்லர் 1 ரன், டூ பிளஸிஸ் 28 ரன்களுடன் களத்தில் இருந்தனர். அஸ்வின் வீசிய பந்தை அடித்த டூபிளஸிஸ் ரன் எடுக்க ஓடினார். ஆனால் பந்து பீல்டரால் தடுக்கப்பட்டதைப் பார்த்து யூ டர்ன் போட்டுத் திரும்பி விட்டார்.

மில்லர் பரிதாப அவுட்

மில்லர் பரிதாப அவுட்

மறு முனையில் மின்னல் வேகத்தில் ஓடி வந்து விட்ட மில்லர், டூ பிளஸிஸ் ரிட்டர்ன் ஆனதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதற்குள் அவரை டோணி ரன் அவுட்டாக்கி விட்டார்

அதே மாதிரி

கிட்டத்தட்ட இதே மாதிரிதான் நேற்று ஜடேஜா, பாண்ட்யாவை ரன் அவுட் ஆக்கினார். இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. நல்ல பார்மில் இருந்தார் பாண்ட்யா. மறு முனையில் கட்டையைப் போட்டுக் கொண்டிருந்தார் ஜடேஜா. எனவே அவர் தான் ரன் அவுட் ஆகியிருக்க வேண்டுமே தவிர பாண்ட்யாவைப் பழி கொடுத்திருக்கக் கூடாது என்பது ரசிகர்களின் கருத்து.

Story first published: Monday, June 19, 2017, 11:03 [IST]
Other articles published on Jun 19, 2017
English summary
Like South Africa, India too done the same type of comical run out in the yesterday's final match against Pakistan.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X