For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னாது இந்தியா 42 மாசம் நம்பர் 1 டீமா இருந்தது சாதனையா.. ஆஸி. ரெக்கார்டு என்னென்னு தெரியுமா?

மும்பை : இந்திய அணி டெஸ்ட் போட்டிகள் தரவரிசையில் கடந்த 42 மாதங்களாக முதல் இடத்தில் இருந்தது.

Recommended Video

ICC Test rankings India lose top Test spot to Australia for the first time

அதை மே 1ஆம் தேதி அன்று வெளியான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இழந்தது இந்திய அணி. ஆஸ்திரேலிய அணி முதல் இடத்தை பிடித்தது.

இந்தியா 42 மாதங்கள் முதல் இடத்தில் இருந்தது சாதனை என சிலர் கூறி வந்த நிலையில், டெஸ்ட் போட்டிகள் தரவரிசை சாதனைப் பட்டியல் புள்ளி விவரத்துடன் வெளியாகி உள்ளது.

இந்தியாவுல போய் விளையாடி இந்தியாவை ஜெயிக்கணும்... ஆஸி. கோச்சின் லட்சியம்இந்தியாவுல போய் விளையாடி இந்தியாவை ஜெயிக்கணும்... ஆஸி. கோச்சின் லட்சியம்

ஏழாவது இடம்

ஏழாவது இடம்

அந்த பட்டியலில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பல முறை 42 மாதங்களை விட அதிக காலம் டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்துள்ளது. இந்தியாவின் சாதனை ஏழாவது இடத்தில் தான் உள்ளது. அதே சமயம், இங்கிலாந்தை வீழ்த்தி அதிக காலம் நம்பர் 1 இடத்தில் இருந்த மூன்றாவது அணி என்ற பெருமையை மட்டுமே இந்தியா பெற்றுள்ளது.

அக்டோபர் 2016இல் முதல் இடம்

அக்டோபர் 2016இல் முதல் இடம்

இந்திய அணி கடந்த அக்டோபர் 2016இல் ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை பெற்றது. அந்த ஆண்டு இந்திய அணி 12 டெஸ்ட் போட்டிகளில் வென்று, ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து இருந்தது.

தொடர்ந்து முதல் இடம் பெற்ற இந்தியா

தொடர்ந்து முதல் இடம் பெற்ற இந்தியா

அதைத் தொடர்ந்து 2017, 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றி தோல்விகள் மாறி, மாறி வந்தாலும் இந்திய அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்து இருந்தது.

தரவுகள் நீக்கம்

தரவுகள் நீக்கம்

தற்போது டெஸ்ட் போட்டிகள் எதுவும் நடக்காவிட்டாலும் ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஆண்டு சுழற்சி மாற்றப்பட்டுள்ளது. அதன் படி, 2016-17 காலத்தை சேர்ந்த டெஸ்ட் போட்டிகளின் தரவுகள் நீக்கப்படும். அப்போது பெற்ற வெற்றி தோல்விகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

புள்ளிகள் இழப்பு

புள்ளிகள் இழப்பு

எனவே, 2016 - 17 காலத்தில் இந்தியாவின் தொடர் வெற்றிகள் கணக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அதனால், தரவரிசைப் புள்ளிகளை இழந்துள்ளது இந்தியா. அதே சமயம், ஆஸ்திரேலிய அதன் பின் பெற்ற வெற்றிகளை கணக்கில் கொண்டு தற்போது தரவரிசையில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

முதல் இடத்தில் ஆஸ்திரேலியா

முதல் இடத்தில் ஆஸ்திரேலியா

தற்போது வெளியாகி உள்ள டெஸ்ட் தரவரிசைப் பட்டியலின் படி ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், நியூசிலாந்து 115 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இந்தியா 114 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

பெரிய சாதனையா?

பெரிய சாதனையா?

இந்தியா தொடர்ந்து 42 மாதங்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தது இந்திய ரசிகர்களால் பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகி உள்ள பட்டியலில் 95 மாதங்கள் முதல் இடத்தில் இருந்து ஆஸ்திரேலியா பெரிய சாதனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்து செய்த சாதனை

இங்கிலாந்து செய்த சாதனை

ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பல முறை 40 மாதங்களுக்கும் மேலாக தரவரிசையில் முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துள்ளன. அந்த இரு அணிகளை தவிர்த்து இங்கிலாந்து அணி 37 மாதங்கள் முதல் இடத்தில் இருந்தது.

இந்தியா மூன்றாம் இடம்

இந்தியா மூன்றாம் இடம்

தற்போது இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு அடுத்து அதிக காலம் முதல் இடத்தில் இருந்த மூன்றாவது அணி என்ற பெருமையை மட்டுமே பெற்று உள்ளது இந்தியா. ஒட்டு மொத்த பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.

டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்

டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்

அதிக காலம் முதல் இடத்தில் இருந்த அணிகள்:

ஆஸ்திரேலியா (2001-2009) - 95 மாதங்கள்

மேற்கிந்திய தீவுகள் (1981-1988) - 89 மாதங்கள்

ஆஸ்திரேலியா (1959-1963) - 60 மாதங்கள்

மேற்கிந்திய தீவுகள் (1964-1968) - 60 மாதங்கள்

ஆஸ்திரேலியா (1995-1999) - 44 மாதங்கள்

ஆஸ்திரேலியா (1974-1978) - 43 மாதங்கள்

இந்தியா (2016-2020) - 42 மாதங்கள்

ஆஸ்திரேலியா (1952-1955) - 41 மாதங்கள்

இங்கிலாந்து (1970-1973) - 37

Story first published: Friday, May 1, 2020, 19:47 [IST]
Other articles published on May 1, 2020
English summary
India’s 42 months No.1 test rank reign is not big when compared to Australia and West Indies.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X