கோலி தெரியும்..!! உங்களுக்கு குட்டி கோலி தெரியுமா..?? ஒருநாள் தொடரில் சுளுக்கு எடுக்க வராரு..

கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2க்கு1 என்ற கணக்கில் இழந்துள்ளது. இந்த நிலையில் வரும் 19ஆம் தேதி ஒருநாள் தொடர் தொடங்குகிறது.

ஆனால் ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கோலி நீக்கப்பட்டு ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். ஆனால் ரோகித்துக்கும் காயம் என்பதால் கேப்டனாக களமிறங்குகிறார் குட்டி கோலி..

ஆம் , அந்த குட்டி கோலி யாரு.. கேப்டனாக அவர் என்ன செய்துள்ளார். என்ன செய்யப் போகிறார் என்பதை தற்போது காணலாம்..மீம்ஸ் பார்க்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் குட்டி கோலி என்று நீங்கள் படித்த உடனே, அது கே.எல்.ராகுல் தான் என்று உங்களுக்கு தெரிந்து இருக்கும்.

BIG BREAKING – இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி ராஜினாமா… உருக்கமான கடிதம்BIG BREAKING – இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி ராஜினாமா… உருக்கமான கடிதம்

இந்தியாவுக்கு வாய்ப்பு

இந்தியாவுக்கு வாய்ப்பு

ஏற்கனவே கே.எல்.ராகுல் தலைமை தாங்கி 2வது டெஸ்டில் இந்திய அணி மண்ணை கவ்வியது. ஒருநாள் தொடரில் மட்டும் என்ன நடந்து விட போகிறது என்று நீங்கள் நினைக்கலாம். அந்நிய மண்ணில் டெஸ்ட் போட்டி என்பது தலைக்கீழாக நின்று தண்ணீர் குடிப்பதற்கு சமம். ஆனால் ஒருநாள் போட்டி இந்திய வீரர்களுக்கு தேனீர் அருந்துவது போல்.. இதனால் இந்தியாவுக்கே அதிக வெற்றி வாய்ப்பு

அதிரடி ராகுல்

அதிரடி ராகுல்

ஆனால், கே.எல்.ராகுல், ஒருநாள் போட்டியில் என்ன செய்ய போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.கே.எல்.ராகுலுக்கு கேப்டன் பதவி என்பது புதுசு அல்ல..ஏற்கனவே ஐ.பி.எல் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் அவருக்கு உள்ளது. சும்மாவே அதிரடி ஆடக்கூடிய கே.எல்.ராகுலுக்கு, கேப்டன் என்ற பொறுப்பும் வழங்கியுள்ளதால் ருத்ரதாண்டவம் ஆடுவார்

என்ன செய்வார்?

என்ன செய்வார்?

ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணிக்காக தனி ஆளாக நின்று போராடும் கே.எல்.ராகுலுக்கு தற்போது பக்க பலமாக விராட் கோலி இருக்கிறார். இதனால் சொல்லவா வேண்டும். கே.எல்.ராகுல் பேட்டிங்கில் கலக்குவார் என்பதில் ஐயமே இல்லை. ஆனால் கேப்டனாக அவர் என்ன செய்ய போகிறார் என்பது தான் கேள்வி

வெற்றி கிடைக்குமா?

வெற்றி கிடைக்குமா?

கே.எல்.ராகுலுக்கு இது முதல் பெரிய பொறுப்பு என்பதால், தொடக்கத்தில் அவர் தவறு செய்வார். நிறையவே செய்வார். அதனால் இந்தியா தோல்வி அடைய கூட வாய்ப்புண்டு. ஆனால் கேப்டனாக அவர் பாடம் கற்று கொள்வார். ராகுல் எவ்வளவு சீக்கிரம் கேப்டனாக பாடம் கற்று கொள்கிறாரோ, அவ்வளவு நல்லது இந்திய கிரிக்கெட்டுக்கு.!! சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்து, போட்டி சூழலுக்கு ஏற்ப பந்துவீச்சாளர்களுக்கு ஓவர் வழங்குவது, ஃபில்டங்கை சரியாக நிறுத்துவது, இந்த மூன்றிலும் ஒரு 70 சதவீதம் மதிப்பெண் எடுத்தாலே ராகுலுக்கு வெற்றி தான்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
India’s stand in captain KL Rahul looking to win in SA ODI Series கோலி தெரியும்..!! உங்களுக்கு குட்டி கோலி தெரியுமா..?? ஒருநாள் தொடரில் சுளுக்கு எடுக்க வராரு..
Story first published: Saturday, January 15, 2022, 20:10 [IST]
Other articles published on Jan 15, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X