For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரொம்ப வீக்கா இருக்கீங்கய்யா.. இந்திய அணியை.. பட்டி டிங்கரிங் பார்க்கச் சொல்லும் வாகன்!

Recommended Video

இந்தியா ரொம்ப வீக்கா இருகாங்க ! - மைக்கேல் வாகன் கருத்து

லண்டன் : சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் பலவீனம் குறித்து முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் சுட்டிக் காட்டியுள்ளார்.

கடந்த இரண்டு உலக கோப்பை போட்டிகளில் கோப்பைகளை கைப்பற்ற முடியாத நிலையில் தங்களது பலவீனத்தை சரிசெய்து 2023ல் நடைபெறவுள்ள உலக கோப்பையை கைப்பற்றும் முயற்சியில் இந்தியா இறங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மும்பையில் கடந்த 14ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியாவின் ஆட்டத்தை காண தான் ஆவலுடன் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவோட பதிலடி.. ரொம்ப பலமா இருக்கும்.. சூதானமா இருங்கப்பா.. எச்சரிக்கும் பிஞ்ச்!இந்தியாவோட பதிலடி.. ரொம்ப பலமா இருக்கும்.. சூதானமா இருங்கப்பா.. எச்சரிக்கும் பிஞ்ச்!

முதல் போட்டியில் இந்தியா தோல்வி

முதல் போட்டியில் இந்தியா தோல்வி

சர்வதேச அளவில் வலிமையான அணியாக கருதப்படும் இந்தியா, தொடர்ந்து பல தொடர்களில் வெற்றி பெற்றுவரும் நிலையில், ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் கடந்த 14ம் தேதி தோல்வியடைந்துள்ளது.

தோல்விக்கு கூறப்படும் காரணங்கள்

தோல்விக்கு கூறப்படும் காரணங்கள்

இந்த போட்டியில் துவக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மாவுடன் யாரை களமிறக்குவது என்பது குறித்து பல்வேறு யூகங்கள் இருந்தது. பேட்டிங் வரிசையில் பல்வேறு மாற்றங்களையும் கேப்டன் விராட் கோலி முயற்சித்திருந்தார். இந்த மாற்றங்களே அணியின் தோல்விக்கு காரணமாக தற்போது கூறப்படுகிறது.

வீணான வீரர்களின் முயற்சி

வீணான வீரர்களின் முயற்சி

ஆட்டத்தில் ரோகித் சர்மா சொற்ப ரன்களில் வெளியேற, கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் 121 ரன்களை குவித்த போதிலும், அது விழலுக்கு இறைத்த நீரானது.

முன்னாள் இங்கிலாந்து வீரர் கருத்து

முன்னாள் இங்கிலாந்து வீரர் கருத்து

இந்நிலையில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் தோல்விக்கு அவர்களது மிடில் ஆர்டர் சரியாக இல்லாததே காரணம் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

இந்தியா தயாராக வேண்டும்

இந்தியா தயாராக வேண்டும்

கடந்த இரண்டு உலக கோப்பைகளிலும் கோப்பையை கைப்பற்ற முடியாத இந்தியா, வரும் 2023 உலக கோப்பைக்குள் தங்களது பலவீனத்தை கண்டறிந்து அதை தீர்க்க முயல வேண்டும் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் வாகன் கூறியுள்ளார்.

வரலாற்றை தொடர வேண்டும்

வரும் உலக கோப்பை 2023 இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், தொடரை நடத்துபவர்களே கோப்பையை வெல்வார்கள் என்ற வரலாற்றை தொடர இந்தியா முயற்சிக்க வேண்டும் என்றும் அதற்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மைக்கேல் வாகன் பதிவு

மைக்கேல் வாகன் பதிவு

இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த இந்தியாவின் இரண்டாவது போட்டியை, அவர்களது பதிலடியை காண தான் ஆவலுடன் உள்ளதாகவும் வாகன் கூறியுள்ளார்.

Story first published: Friday, January 17, 2020, 13:55 [IST]
Other articles published on Jan 17, 2020
English summary
Former England Captain on India's weakness in ODIs
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X