For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிதறடித்த தவான்… தவறவிட்ட டான் ரோகித்… ஆஸி.யை கதறவிட்ட இந்தியா 358 ரன்கள் குவிப்பு

மொகாலி:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோகித் சர்மா, ஷிகர் தவான் கைகொடுக்க, இந்திய அணி, 50 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 358 ரன்கள் எடுத்தது.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி நான்கு அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கியது. ராயுடுவுக்கு பதில் ராகுல் அணியில் சேர்க்கப்பட்டார்.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து சொதப்பி வந்த தவான், இந்த போட்டியில் கண்டிப்பாக சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கினார்.

ஆஸி.க்கு தண்ணி காட்டிய தவான்.. 143 ரன்கள் அடித்து ஒருநாள் போட்டியில் புதிய சாதனைஆஸி.க்கு தண்ணி காட்டிய தவான்.. 143 ரன்கள் அடித்து ஒருநாள் போட்டியில் புதிய சாதனை

சிறந்த ஆட்டம்

சிறந்த ஆட்டம்

ரோகித், தவான் இருவருமே தொடக்கம் முதலே சிறப்பாக ஆடினர். தவான் ஆஸ்திரேலிய பவுலர்களின் பந்துகளை பதம் பார்த்தார். ரோகித்தோ வழக்கம் போல தொடக்கத்தில் நிதானமாக ஆட்டம்... பின்னர் ராக்கெட் வேகத்தில் சுழன்றார்.

பவுலர்கள் திணறல்

பவுலர்கள் திணறல்

இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, முதல் விக்கெட்டை வீழ்த்தவே ஆஸி. பவுலர்கள் திணறினர். 92 பந்துகளில் 95 ரன்களை குவித்த ரோகித் சர்மா 5 ரன்களில் சதத்தை தவறவிட்டார்.

தவான் பொறுமை

தவான் பொறுமை

ஆனால் தவான் பொறுமை காத்தார். காத்திருந்து சதம் அடித்தார். அதன் பிறகு அதிரடியாக ஆடி பவுண்டரிகளை விளாசினார். 115 பந்துகளில் 143 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

விழுந்த விக்கெட்டுகள்

விழுந்த விக்கெட்டுகள்

பின்னர் கோலி 7 ரன்களில் ஆட்டமிழக்க, களத்தில் நிலைத்து நின்ற ராகுல் சம்பாவின் பந்தில் வெளியேறினார். அதன்பிறகு ரிஷப் பண்ட் மட்டுமே சில பவுண்டரிகளை அடிக்க, அவரும் 36 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

குறைந்த ரன்கள்

குறைந்த ரன்கள்

டெத் ஓவர்களை கம்மின்ஸும் ரிச்சர்ட்சனும் அற்புதமாக வீசினர்.370 ரன்களுக்கு மேல் வந்திருக்க வேண்டிய குறைந்தது. கேதர் ஜாதவும் கம்மின்ஸின் பந்தில் வெளியேற, 49வது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியை விஜய் சங்கர் அடித்தார்.

கடைசியில் சிக்சர்

கடைசி ஓவரிலும் ஒரு சிக்சரை விளாசிய விஜய் சங்கர் 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். இன்னிங்ஸின் கடைசி பந்தில் கடைசி விக்கெட்டாக களத்திற்கு வந்த பும்ரா, சிக்சர் அடிக்க பெவிலியனில் இருந்த கோலி கை தட்டி மகிழ்ந்தார்.

இந்தியா 358 ரன்கள்

இந்தியா 358 ரன்கள்

இதையடுத்து இந்திய அணி 50 ஓவர் முடிவில் 358 ரன்களை குவித்தது. ரோகித், தவானின் அடித்தளத்திற்கு 400 ரன்ளை இந்திய அணி எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏன் என்றால்.. 32 ஓவர்களிலேயே இந்திய அணி 200 ரன்களை எட்டியிருந்தது.

ரன்கள் உயரவில்லை

ரன்கள் உயரவில்லை

ஆனால் எஞ்சிய 18 ஓவர்களில் குவித்தது 158 ரன்கள் மட்டுமே. ரோகித் சதம் அடித்திருந்தால் அணியின் ரன் விகிதம் உயர்ந்திருக்கும். ஏன் என்றால்... இதே மைதானத்தில்தான் இலங்கைக்கு எதிராக ரோகித், தமது 2வது இரட்டை சதத்தையும், ஒருநாள் போட்டியில் 3வது இரட்டை சதத்தையும் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, March 10, 2019, 18:47 [IST]
Other articles published on Mar 10, 2019
English summary
india scored 358 runs against Australia in mohali odi.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X