For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது மட்டும் நடந்தால் நியூசிலாந்து காலி.. ஆனால் நடத்தி காட்டுமா இந்தியா?

கான்பூர்; இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கான்பூர் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 345 ரன்கள் எடுக்க, நியூசிலாந்து அணி 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன் மூலம் 49 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 14 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற கோருடன் 4வது நாய் ஆட்டத்தை தொடர்ந்தது.

தடுமாற்றம்

தடுமாற்றம்

மாயங் அகர்வால் 4 ரன்களுடனும், புஜாரா 9 ரன்களுடனும் ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்திய அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 22 ரன்களில் லேக் சைட் சென்ற பந்தை ஷாட் ஆட முயன்று விக்கெட் கீப்பரிடம் பிடிப்பட்டார். சரி,கேப்டன் ரஹானே அணியின் மானத்தை காப்பாற்றுவார் என நினைத்தால், 4 ரன்களில் ஆட்டமிழந்து தற்போது அணியில் அவரது இடத்தை அவராலேயே காப்பற்ற முடியவில்லை.

மிட்பர்

மிட்பர்

இந்த நிலையில் தொடக்கத்திலிருந்து போராடிய மாயங் அகர்வால் 17 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்ப, அதே ஓவரில் ஜடேஜாவும் டக் அவுட்டாகி நடையை கட்டினார். இதனால் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்து தடுமாறியது. இதனையடுத்துஜோடி சேர்ந்த அஸ்வின், ஸ்ரேயாஸ் ஐயர் அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்

பார்ட்னர்ஷிப்

பார்ட்னர்ஷிப்

நியூசிலாந்து அணியை ஆதிக்கம் செலுத்த விடாமல் அஸ்வின், நேர்த்தியான ணாட்களை ஆட அணியின் ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்து. மறுபக்கம் ஸ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் இன்னிங்க்கு ஏற்றார் போல் விளையாடினார். இருவரும் மோசமான பந்துகளை பவுண்டரிக்கி விரட்டியும், நல்ல பந்துகளை தொடமாலும் விட்டனர்.அஸ்வின் 32 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 65 ரன்கள் சேர்த்தார்.

காப்பாற்றிய சாஹா

காப்பாற்றிய சாஹா

நியூசிலாந்துக்கு அதிக இலக்கை நிர்ணயித்தால் தான் வெற்றி பெற முடியம் என்பதை உணர்ந்த விதிர்மான் சாஹா, தமக்கு பேட்டிங் செய்ய தெரியும் என்று நிரூபித்தார். அக்சர் பட்டேலுடன் ஜோடி சேர்ந்து ரன்களை சோ சேர்த்தார். இந்த ஜோடி 8வது வக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்க்க இந்திய அணி ஆபத்தான கட்டத்தை தாண்டியது. சாஹா 5 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் அரைசதம் விளாசினார். சாஹா 61 ரன்கள், அக்சர் பட்டேல் 28 ரன்கள் எடுக்க, இந்திய அணி 2வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

Recommended Video

IND vs NZ 1st Test: Kiwis Escape with a Draw in Kanpur | OneIndia Tamil
இது நடந்தால்…

இது நடந்தால்…

இதன் மூலம் 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் வில் யங் 2 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் வெளியேறினார். நாளை 90 ஓவர்கள் இருக்க, நியூசிலாந்து அணிக்கு கைவசம் 9 விக்கெட்டுகள் இருக்க 280 ரன்கள் தேவைப்படுகிறது. இதனால் நாளைய ஆட்டம் ஒன்று டிராவில் முடிவடையும், இல்லை இந்தியா வெற்றி பெறும். கடைசி நாளில் சுழற்பந்துவீச்சுக்கு மட்டும் சாதகமாக செயல்பட்டால் இந்திய அணியின் வெற்றி உறுதியாகிவிடும்.

Story first published: Sunday, November 28, 2021, 18:21 [IST]
Other articles published on Nov 28, 2021
English summary
India set 284 Runs target for NZ to win
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X