For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோல்வியை தவிர்க்க நியூசிலாந்து போராட்டம்- வெற்றி முகத்தில் இந்தியா

மும்பை: இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்திய அணி முதல் இன்னிங்சில்325 ரன்கள் எடுத்தது.இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.

இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 62 ரன்களுக்கு சுருண்டது. இது இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து எடுத்த குறைந்தபட்ச ஸ்கோராகும்.

இளம் வீரர்களை பாராட்டிய சச்சின்.. ஆனால் ஒன்று..!!இளம் வீரர்களை பாராட்டிய சச்சின்.. ஆனால் ஒன்று..!!

ஃபாலோ ஆன்

ஃபாலோ ஆன்

263 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி.நியூசிலாந்து அணிக்கு ஃபாலோ ஆன் தராமல் இரண்டாவத இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய புஜாரா, மாயங் அகர்வால் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்த இந்திய அணி மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்து. புஜாரா, அகர்வால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்தது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

அகர்வால் 62 ரன்களக்கு ஆட்டமிழக்க, பொறுப்பாக விளையாடிய புஜாரா 47 ரன்கள் சேர்த்து அக்சர் பட்டேல் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். சுப்மான் கில், விராட் கோலி ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது.சுப்மான் கில்லும் 47 ரன்கள் சேர்க்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி, ரவிந்திரா பந்துவீச்சில் பவுல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

ஸ்ரேயாஸ் ஐயர், விரித்மான் சாஹா ஆகியோரும் நிலைத்து நிற்க தவறினர். இறுதியில் அக்சர் பட்டேல் மட்டும் ஆட்டமிழக்காமல் 4 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி7 விக்கெட் இழப்பிற்கு276 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 540 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

கடைசி இன்னிங்ஸ்

கடைசி இன்னிங்ஸ்

இன்னும் இரண்டரை நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், நியூசிலாந்து அணி தனது கடைசி இன்னிங்சில் களமிறங்கியது.கேப்டன் டாம் லத்தம் 6 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் வெளியேறினார். ராஸ் டைலர், வில் யங் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, டேரல் மிட்சல் மட்டும் தாக்குபிடித்து 60 ரன்கள் சேர்த்தார். மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் அந்த அணியின் வெற்றிக்கு 400 ரன்களும், இந்தியாவின் வெற்றிக்கு 5 ரன்களம் தேவைப்படுகிறது. . இதனால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

Story first published: Sunday, December 5, 2021, 18:53 [IST]
Other articles published on Dec 5, 2021
English summary
India set Huge Target For NZ to win in Mumbai Test. India declared 276 runs for 7 Wickets.India having a bright chance to Win the series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X