For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹர்திக் பாண்டியா வர்றாங்க.. ஷிகர் தவான் வந்துட்டாங்க.. புவனேஸ்வரும் திரும்பிட்டாங்க!

டெல்லி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. மொத்தம் 3 போட்டிகளில் இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் ஆடவுள்ளன.

இந்த தொடருக்கான இந்திய அணியை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை தேர்வாளர் உள்ளிட்ட இந்திய தேர்வாளர் குழு இன்று அறிவித்தது. இதில் ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் அணிக்குத் திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவருமே காயம் காரணமாக சமீப காலமாக இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்து வந்தனர்.

India squad for ODI series against SA announced

இவர்களின் வருகையால் இந்திய அணி பலமாகியுள்ளது. அதேசமயம், நியூசிலாந்து தொடரில் காயமடைந்த ரோஹித் சர்மா அணியில் இடம் பெறவில்லை. நியூசிலாந்தில் மோசமாக ஆடிய மயங்க் அகர்வால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நல்லாருங்கம்மா.. நல்லாருங்க.. நல்லா ஆடுனீங்க.. மனசார பாராட்டுகிறோம்!நல்லாருங்கம்மா.. நல்லாருங்க.. நல்லா ஆடுனீங்க.. மனசார பாராட்டுகிறோம்!

இந்திய அணியை, இந்திய தேர்வுக் குழுவின் புதிய தலைவர் சுனில் ஜோஷி தலைமையிலான குழு அறிவித்தது. இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி நீடிப்பார். அவருக்கு ஓய்வு தரப்படவில்லை. கோலியும் கூட நியூசிலாந்து தொடரில் மோசமான பார்மில் இருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

இதுதான் இந்திய அணியின் விவரம்:

ஷிகர் தவான், பிருத்வி ஷா, விராட் கோலி (கேப்டன்), கே.எல். ராகுல், மணீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சஹல், ஜஸ்ப்ரிட் பும்ரா, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், சுப்மன் கில்.

Story first published: Sunday, March 8, 2020, 18:03 [IST]
Other articles published on Mar 8, 2020
English summary
Indian squad for ODI series against SA has been announced, Hardik Pandya, Shikhar Dhawan, Bhuvneshwar have returned.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X