For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சறுக்கி வரும் ரோகித் கேப்டன்ஷி.. ரோகித்துக்கு யுவராஜ் கொடுத்த மார்க் எவ்வளவு தெரியுமா?

மும்பை : கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நியமனம் ஒரு புதிய சகாப்தத்தை உறுதியளித்ததால், இந்தியா 2022 இல் மிகுந்த நம்பிக்கையுடன் நுழைந்தது.

இருப்பினும், மென் இன் ப்ளூவுக்கு இந்த ஆண்டு மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. இதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியின் முடிவு சவ பெட்டிக்கு கடைசி ஆணி அடித்து மூடுவது போல் அமைந்துவிட்டது.

வங்கதேசம் மற்றும் இந்தியா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் தொடக்க ஒருநாள் போட்டியில், இந்திய அணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.

ரோஹித் ஷர்மாவுக்கு ரெஸ்ட் தேவையா.. ஐபிஎல் தொடரின்போது ஓய்வு எடுக்கலாமே.. பொங்கிய முன்னாள் வீரர்! ரோஹித் ஷர்மாவுக்கு ரெஸ்ட் தேவையா.. ஐபிஎல் தொடரின்போது ஓய்வு எடுக்கலாமே.. பொங்கிய முன்னாள் வீரர்!

கேப்டன்ஷி குறை

கேப்டன்ஷி குறை

இதன் மூலம் வங்கதேச அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றனர். வங்கதேசத்தின் 10வது விக்கெட் ஜோடியான மெஹிதி ஹசன் மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் 51 ரன் பார்ட்னர்ஷிப்பை அமைத்ததால் கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி ரசிகர்கள் மற்றும் நிபுணர்களின் கோபத்தை எதிர்கொண்டது.

 தொடரும் தோல்வி

தொடரும் தோல்வி

2022 ஆசியக் கோப்பை தொடரில் ஹாட்ரிக் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்கியது. அந்த தொடரில் இந்தியா தான் பட்டம் வெல்லும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ரோகித் சர்மாவின் தவறான யுத்தியால், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது தொடங்கிய ரோகித் கேப்டன்ஷியின் சரிவு, , 2022 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிச் சுற்றில் தோல்வியை தழுவியதன் மூலம், கடலில் கப்பல்கள் கரைத்தட்டுவது போல், ஆனது.

பேட்டிங் பாதிப்பு

பேட்டிங் பாதிப்பு

இதே போன்று ஐபிஎல் தொடரிலும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி, கடைசி இடத்தை பிடித்தது. கேப்டன்ஷியில் மட்டுமல்லாமல் ரோகித் சர்மாவின் பேட்டிங்கிலும் கடும் விமர்சனத்தை பெற்றது. டி20 உலககோப்பையில் நெதர்லாந்துக்கு மட்டும் எதிராக அரைசதம் அடிததவர். மற்ற போட்டிகளில் அடி வாங்கினார். இதே போன்று வங்கதேசத்திற்கு எதிராக டாக்காவில் வெறும் 27 ரன்களில் ஆட்டமிழந்ததால் ரோஹித்தின் சொந்த பேட்டிங் ஃபார்ம் மீதும் ரசிகர்களின் சந்தேக கண்கள் திரும்பியுளளன. ஏற்கனவே டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவியை பார்த்தது போல், ஒருநாள் போட்டியிலும் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுத் தொடங்கிவிட்டன.

யுவராஜ் சிங் விமர்சனம்

யுவராஜ் சிங் விமர்சனம்

இதனால் ரோஹித்தின் நகர்வுகள் ஏராளமாக கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன, ஆனால் அவரது முன்னாள் சக வீரரும், புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரருமான யுவராஜ் சிங்கிற்கு அவரது தலைமைத்துவத்தில் எந்த பிரச்சனையும் இல்லை போலும். ரோஹித்தின் கேப்டன்ஷிப் குறித்து உங்கள் மதிப்பீடு என்ன என்று ரசிகர் கேட்டதற்கு, '10/10' என மதிப்பிட்டு டிவிட்டரில் பதில் அளித்துள்ளார். ரோகித் சர்மா மீண்டும் பழைய படி ஃபார்ம்க்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Story first published: Tuesday, December 6, 2022, 16:37 [IST]
Other articles published on Dec 6, 2022
English summary
India star batsman yuvraj singh gives mark to rohit sharma captaincy சறுக்கி வரும் ரோகித் கேப்டன்ஷி.. ரோகித்துக்கு யுவராஜ் கொடுத்த மார்க் எவ்வளவு தெரியுமா?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X