For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி.கிட்ட வாங்கின அடியெல்லாம் கண் முன்னாடி வந்துபோகுமா இல்லையா.. சூனா பானா போல பேசும் ஸ்மித்!

By Veera Kumar

சிட்னி: முத்தரப்பு தொடரிலும், டெஸ்ட் தொடரிலும், ஆஸ்திரேலியாவிடம் இந்தியா பெற்ற அடி, அந்த அணிக்கு நினைவில் இருக்கும், அது அரையிறுதியில் எங்களுக்கு சாதகமான அம்சம் என்று ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பூச்சாண்டி காண்பித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2ல் தோற்றது. 2 டெஸ்ட்டை டிரா செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா பங்கேற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரிலும் இந்தியா ஒரு வெற்றியையும் பெறவில்லை.

உலக நாயகன்

உலக நாயகன்

இந்நிலையில், நடப்பு உலக கோப்பையில் இந்தியா சிறப்பாக ஆடி வருகிறது. லீக் ஆட்டங்கள் ஆறு மற்றும் காலிறுதி போ்ட்டி ஆகியவற்றுடன் சேர்த்து மொத்தம் 7 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று அசத்தியுள்ளது இந்தியா.

ஆஸ்திரேலியா சொதப்பல்

ஆஸ்திரேலியா சொதப்பல்

ஆனால் ஆஸ்திரேலியாவோ, நியூசிலாந்துடன் தோற்றது. வங்கதேசத்துடனான போட்டி மழையால் கைவிடப்பட்டு புள்ளிகளை பெற்றது.

மேக்ஸ்வெல் வம்பு

மேக்ஸ்வெல் வம்பு

நாளை மார்ச் 26ம்தேதி சிட்னியில் நடைபெற உள்ள அரையிறுதியில் இந்தியா-ஆஸ்திரேலியா பலப் பரிட்சை நடத்த உள்ளன. இப்போட்டி குறித்து இரு தினங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய அதிரடி வீரர் மேக்ஸ்வெல், இந்தியா ஏற்கனவே அடைநத தோல்விகளை சுட்டிக் காட்டி கேலி செய்தார்.

மனதில் இருக்குமில்ல..

மனதில் இருக்குமில்ல..

இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளதாவது: இந்தியா தனது சுற்றுப்பயணத்தின்போது, ஆ்ஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு போட்டியிலும் வெற்றிபெறவில்லை. இந்த பயம் அவர்களுக்கு மனதில் இருந்து கொண்டிருக்கும். அது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமானதாகும். .

கேம் பிளான்

கேம் பிளான்

நான் மூன்றாவது வீரராக களமிறங்கவே விருப்பம் கொண்டுள்ளேன். அப்போதுதான் நானும், மைக்கேல் கிளார்க்கும் சிங்கிள்கள் தட்டிக் கொடுக்க முடியும். கடைசி 15 ஓவர்களில் அதிரடி ஆட்டக்காரர்களை களமிறக்கி முடித்த அளவுக்கு அதிக ரன்களை ஈட்ட முடியும். இலங்கைக்கு எதிராக இப்படித்தான் செய்து வெற்றி பெற்றோம். இவ்வாறு ஸ்மித் கூறினார்.

பாக். எதிராக அபாரம்

பாக். எதிராக அபாரம்

பாகிஸ்தானு்க்கு எதிரான காலிறுதியில் இக்கட்டான நேரத்தில் களமிறங்கி 65 ரன்கள் எடு்த்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் ஸ்மித் என்பது குறிப்பிடத்தக்கது.

உளவியல் நெருக்கடி

உளவியல் நெருக்கடி

சிட்னி பிட்ச் சுறழ்பந்துக்கு சாதகமானதாகும். ஆனால் ஆஸ்திரேலியாவிடம் உலகதரம் கொண்ட ஸ்பின்னர் யாருமேயில்லை. இந்தியாவிலோ, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் ஸ்பின்னில் கலக்கி வருகிறார்கள். எனவே மனரீதியாக இந்திய வீரர்களின் வலிமையை குலைக்க ஆஸ்திரேலிய அணியினர் இவ்வாறு பேட்டிகளை கொடுத்து வருவதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகிறார்கள் எனவேதான் சூனா, பானா வடிவேலு போல, பஞ்சாயத்தை கலைக்க பெரும்பாடு படுகின்றனர்..

Story first published: Wednesday, March 25, 2015, 10:12 [IST]
Other articles published on Mar 25, 2015
English summary
India still bear the scars of the mauling they suffered at the hands of Australia at the start of their tour Down Under and Steve Smith thinks it could be a factor when the countries meet in Thursday’s World Cup semi-final.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X