மொத்த டீமும் ஆடிப்போய்விட்டது.. பயந்த பயிற்சி குழு.. வாஷிங்டன் சுந்தருக்கு இப்படி ஒரு பிரச்சனையா?

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர் எதிர்கொண்ட வித்தியாசமான பிரச்சனை ஒன்றை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் முடிவு கிரிக்கெட் உலகையே அதிர வைத்துள்ளது. 4-0 என்று இந்தியா வொயிட்வாஷ் ஆகும் என்று பலரும் கணித்த நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.

8 அணிகள்.. மொத்தமாக சென்னைக்கு வரும் ஐபிஎல் தலைகள்.. பெரிய அளவில் நடக்க போகும் மினி ஏலம்!

கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தக்க வைத்துள்ளது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் மட்டுமின்றி டெஸ்ட் தொடர் வரலாற்றில் இது மிக முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது.

வெற்றி

வெற்றி

அதிலும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆன தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். மொத்தமாக நான்கு விக்கெட், இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 80+ ரன்கள் என்று வாஷிங்க்டன் சுந்தர் புதிய சாதனை படைத்தார்.

சிக்கல்

சிக்கல்

இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியின் போது தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர் எதிர்கொண்ட வித்தியாசமான பிரச்சனை ஒன்றை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இவர் முதலில் டெஸ்ட் அணியில் ஆடுவதாக இல்லை. ஜடேஜா இல்லை என்பதால் ஆல் ரவுண்டனர் வேண்டும் என்று இவர் களமிறக்கப்பட்டார். இவர் மிகவும் உயரமான வீரர்.

உயரம்

உயரம்

இதனால் இவரின் காலில் மொத்தமாக பொருந்துவது போன்ற பேட் கிடைக்கவில்லை. இவரிடம் ஒருநாள் அணிக்கான பேட் மட்டுமே இருந்துள்ளது. டெஸ்ட் அணிக்கான பேட் இல்லை. இதனால் போட்டிக்கு முன்பாக பேட் இல்லாமல் சிரமப்பட்டுள்ளார். இவரின் உயரத்திற்கு இந்திய அணியில் யாரிடமும் பேட் இல்லை என்று கூறப்படுகிறது.

அலைச்சல்

அலைச்சல்

இதனால் ஆஸ்திரேலிய அணியிடம் இவருக்காக பேட் கடன் வாங்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். ஆனால் கொரோனா விதிகள் காரணமாக ஆஸ்திரேலிய அணியிடமும் சுந்தருக்காக பேட் வாங்க முடியவில்லை. இந்திய அணியிடம் இவரின் உயரத்திற்கு டெஸ்ட் பேட் இல்லை என்றதும் போட்டி நடக்கும் அதே நாளில் புதிய பேட் வாங்கப்பட்டது.

புதிய பேட்

புதிய பேட்

இதற்காக பயிற்சி குழுவை சேர்ந்த சில போட்டி நடக்கும் அதே நாளில் வெளியே கடைக்கு சென்று புதிய பேட் வாங்கி உள்ளனர். அதுவரை மொத்த டீமும் பதற்றத்திலேயே இருந்துள்ளது. ஆனால் அப்போதும் இவரின் உயரத்திற்கு பேட் கிடைக்கவில்லை என்பதால் பல கடைகளுக்கு சென்று, கடைசியாகவே சுந்தரின் உயரத்திற்கு ஏற்ற பேட் கிடைத்துள்ளது .

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Team India struggled to Get a perfect pad for Washington Sundar height in the Border Gavaskar Trophy final test.
Story first published: Saturday, January 23, 2021, 12:31 [IST]
Other articles published on Jan 23, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X