For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

45 பந்துகளாக பவுண்டரிகள் இல்லை.. டெஸ்ட் மேட்ச் போல் டி20 ஆடிய இந்தியா..கடைசி ஓவரில் திரில் வெற்றி

லக்னோ : நியூசிலாந்துக்கு எதிரான 2வது 20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் என்ற இலக்கை துரத்த கடுமையாக போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில், டாசை இழந்த இந்திய அணி, முதலில் பந்துவீச பணிக்கப்பட்டது.

இந்திய அணியில் உம்ரான் மாலிக் நீக்கப்பட்டு, சாஹல் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட, 4 சுழற்பந்துவீச்சாளர்களுடன் இந்தியா விளையாடியது.

99 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து.. செம பதிலடி கொடுத்த இந்தியா.. கொத்தாக விழுந்த விக்கெட்டுகள் 99 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து.. செம பதிலடி கொடுத்த இந்தியா.. கொத்தாக விழுந்த விக்கெட்டுகள்

சரிந்த விக்கெட்

சரிந்த விக்கெட்

நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன 2 பவுண்டரிகளை அடித்த பின் 11 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து சிஎஸ்கே வீரர் கான்வேவும் 11 ரன்களில் வாசிங்டன் சுந்தர் பந்துவீச்சில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் கிளன் பிலிப்ஸ் 5 ரன்களிலும், டேரல் மிட்செல், 8 ரன்களில் போல்ட் ஆனார்.

99 ரன்கள்

99 ரன்கள்

பொறுப்பாக விளையாடிய மார்க் சாப்மன் 14 ரன்களில் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆனார். பிராஸ்வெல் 14 ரன்களில் வெளியேற, சோதி 1 ரன்னிலும், பெகுர்சன் டக் அவுட்டாகியும் வெளியேறினார். கேப்டன் சாண்டனர் மட்டும் ஆட்டமிழக்காமல் 19 ரன்கள் சேர்க்க, நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் எடுத்தது.

டெஸ்ட் இன்னிங்ஸ்

டெஸ்ட் இன்னிங்ஸ்

இதனையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு நியூசிலாந்தும், கடுமையான நெருக்கடியை கொடுத்தது. நியூசிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சுப்மன் கில் 11 ரன்களில் ஆட்டமிழக்க, இஷான் கிஷன் 32 பந்துகளை எதிர்கொண்டு 19 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

45 பந்துகள்

45 பந்துகள்

ராகுல் திரிபாதி 13 ரன்களிலும், வாசிங்டன் சுந்தர் 10 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற, இந்திய அணிக்கு கடும் நெருக்க ஏற்பட்டது. இதனையடுத்து சூர்யகுமாரும், ஹர்திக் பாண்டியா பொறுமையாக விளையாடி சிங்கிள்ஸ் ஆடினர். இந்திய அணி 45 பந்துகளாக பவுண்டரி அடிக்காமல் தடுமாறினர்.

திரில் வெற்றி

திரில் வெற்றி

கடைசி 2ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட போது ஹர்திக் பாண்டியா 19வது ஓவரில் பவுண்டரி விளாசினார். இதனையடுத்து, கடைசி ஓவருக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட போது, முதல் பந்தில் 1 ரன்னும், 2வது பந்து டாட் ஆகவும், அடுத்த 2 பந்து சிங்கிளாகவும் ஆனது. இதனையடுத்து 5வது பந்தில் சூர்யகுமார் யாதவ் பவுண்டரி அடிக்க இந்திய அணி ஒரு பந்து எஞ்சிய நிலையில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Sunday, January 29, 2023, 22:56 [IST]
Other articles published on Jan 29, 2023
English summary
india struggling to chase target 100 - thrilling finish by suryakumar 45 பந்துகளாக பவுண்டரிகள் இல்லை.. டெஸ்ட் மேட்ச் போல் டி20 ஆடிய இந்தியா..கடைசி ஓவரில் திரில் வெற்றி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X