For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மொகாலியில் இந்தியா தோற்க இது தான் காரணமா…? கோலி அலர்ட்

Recommended Video

4வது ஒரு நாள் போட்டி : பீல்டிங், பௌலிங்,கீப்பிங் சொதப்பல்- வீடியோ

மொகாலி:எளிதாக வெற்றி பெறவேண்டிய ஒரு ஆட்டத்தை எதிரணியினருக்கு தாரை வார்ப்பது எப்படி என்பதற்கு உதாரணம் மொகாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தை கூறலாம். வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம் தான் இந்தியாவுக்கு தோல்வியை அளித்துள்ளது.

ஒரேயொரு போட்டியை வென்றால் தொடரை வென்றுவிடலாம் என்று கணக்கு போட்டியிருந்த இந்திய அணிக்கு கடந்த 2 போட்டிகள் துரதிருர்ஷ்டவசமாக அமைந்தது. அதிலும் மொகாலி போட்டியை ரசிகர்கள் மறக்க நீண்ட நாட்களாகும் போல.

358 ரன்கள் எனும் இமாலய இலக்கை ஆஸ்திரேலிய அணி எவ்வாறு சேஸிங் செய்யப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி வீரர்களின் மோசமான பந்துவீச்சும் பீல்டிங்கும் அவர்களுக்கு வெற்றியை எளிதாக்கிவிட்டது.

இது அவுட் இல்லையா? என்ன ரிவ்யூ பண்றீங்க? அம்பயரின் தவறான முடிவால் அதிர்ச்சியான கோலி! இது அவுட் இல்லையா? என்ன ரிவ்யூ பண்றீங்க? அம்பயரின் தவறான முடிவால் அதிர்ச்சியான கோலி!

10 ஓவர்களில் ரன்கள்

10 ஓவர்களில் ரன்கள்

சரியாக சொல்ல வேண்டுமானால்... கடைசி 10 ஓவர்கள் தான் வெற்றி யார் பக்கம் என்பதை அறுதியிட்டு கூறியது. அந்த 10 ஓவர்களில் மட்டும் ஆஸ்திரலிய அணி 98 ரன்களை அடித்து நொறுக்கியிருக்கிறது. காட்டடி நாயகன் ஆஸ்டன் டர்னர் மட்டும் 68 ரன்கள் அடித்துள்ளார்.

சிரமம்

சிரமம்

12 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை நெருக்கடியில் தள்ளிய இந்திய அணி அதன்பின் 3வது விக்கெட்டுக்கு கவாஜா, ஹேண்ட்ஸ்கம்ப் ஜோடியை பிரிக்க பெரும் சிரமப்பட்டனர். பின்னர் மேக்ஸ்வெல், ஹேண்ட்ஸ் கம்ப்பை ஆட்டமிழக்கச் செய்தபின் வெற்றி இந்தியாவிடமே இருந்தது.

ஓவருக்கு 10 ரன்கள்

ஓவருக்கு 10 ரன்கள்

26வது ஓவரில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு தேவைப்பட்ட ரன்ரேட் கிட்டத்தட்ட 9. குறிப்பாக 43வது ஓவரின்போது வெற்றிக்கு ஓவருக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. இதனால், இந்தியாவின் பக்கம்தான் வெற்றி என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நேரத்தில் அனைத்தையுமே சொதப்பலாக மாறியது.

கோட்டைவிட்ட கேட்ச்

கோட்டைவிட்ட கேட்ச்

குறிப்பாக ரிஷப் பந்த் கோட்டை விட்ட ஸ்டெம்பிங், கேதார் ஜாதவ், தவான் மிஸ் செய்த கேட்ச் அனைத்தையும் சேதாரப்படுத்தியது. புவனேஷ்குமார் வீசிய 45வது ஓவரில் 20 ரன்கள், பும்ரா வீசிய 46வது ஓவரில் 16 ரன்களை சேர்த்தார் டர்னர்.

வெற்றி எளிதானது

வெற்றி எளிதானது

47வது ஓவரில் 18 ரன்கள் வெளுத் டர்னர் வெற்றியை மிக எளிதாக்கினார். சரியாக சொல்ல வேண்டுமானால் ஆட்டம் முழுவதும் 45வது ஓவரில் இருந்து தலைகீழானது.

விஜய் பந்துவீச்சு

விஜய் பந்துவீச்சு

எல்லா பந்துவீச்சாளர்களையும் பதம் பார்த்த ஆஸி. அணியினரால் விஜய் சங்கரின் பந்துவீச்சை சேதப்படுத்த முடியவில்லை. ஆனால் அவருக்கு வெறும் 5 ஓவர்களை மட்டுமே கேப்டன் கோலி தந்தது என்ன மாயமோ தெரியவில்லை.

டர்னரின் ஆட்டம்

டர்னரின் ஆட்டம்

ஒட்டுமொத்தத்தில் ஆஸி.யை எளிதாக சாய்த்துவிடலாம் என்று எண்ணிய இந்திய அணியின் நினைப்பில் ஒரு லாரி லோடு மணலை அள்ளிப்போட்டு இருக்கிறார் டர்னர் என்று சொல்ல வேண்டும். உலக கோப்பை வேறு நெருங்குகிறது... விழித்துக் கொள்ளுமா இந்தியா?

Story first published: Monday, March 11, 2019, 10:56 [IST]
Other articles published on Mar 11, 2019
English summary
India teams poor performance after 40 overs leads to failure in mohali odi against Australia.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X