For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வாங்க சீனியர்களை பார்க்கலாம்..! இந்திய U-19 அணிக்கு பிசிசிஐ அளித்த கௌரவம்..! சர்ப்ரைஸ் காத்திருக்கு!

அகமதாபாத்: 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலககோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி 5வது முறையாக வென்றது.

இதற்காக யாஷ் துல் தலைமையிலான இந்திய U19 அணிக்கு பி.சி.சி.ஐ. ஒரு சர்ப்ரைஸ் அளித்துள்ளது.

தற்போது இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் போட்டியை காண பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் அண்டர் 19 வீரர்களை போட்டியை வந்து நேரில் பார்க்கும் படி குஜராத் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்தது. இதனையடுத்து ஜூனியர் வீரர்கள் டிப் டாப் டிரஸ் அணிந்து கெத்தாக மைதான கேலரியில் அமர்ந்து, தங்களது ஹீரோக்களை பார்த்தனர்.

India U-19 World champions attended senior match as spectators

ஆனால், ஹீரோக்களோ ஜூனியர்கள் முன் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் இந்திய சீனியர் அணியை நேரில் பார்க்கும் இளம் வீரர்களுக்கு, இதே போல் நாமும் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்று தோன்ற, இது ஒரு நல்ல வாய்ப்பு என்று சுனில் கவாஸ்கர் கூறினார்.

இந்த நிலையில் போட்டியின் இடைவேளையின் போது ஜூனியர் வீரர்களை பாராட்டி நினைவு கோப்பை மற்றும் 40 லட்சம் ரூபாய்க்கான ரொக்கத்தை பி.சி.சி.ஐ. வழங்க உள்ளது. இதனிடையே ஜூனியர்கள் முன் மானத்தை காப்பாற்றி கொள்ளுங்கள் என்று ரசிகர்கள் இணையத்தளத்தில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Recommended Video

Dinesh Bana's Six Remidns of Dhoni’s 2011 WC Final Winning shot | U19 WC 2022 | OneIndia Tamil

விராட் கோலி தந்த அட்வைஸ்.. U19 உலகக்கோப்பை வெற்றிக்கு முக்கிய காரணம்.. யாஷ் துல் தந்த சுவாரஸ்ய பதில்விராட் கோலி தந்த அட்வைஸ்.. U19 உலகக்கோப்பை வெற்றிக்கு முக்கிய காரணம்.. யாஷ் துல் தந்த சுவாரஸ்ய பதில்

Story first published: Wednesday, February 9, 2022, 17:44 [IST]
Other articles published on Feb 9, 2022
English summary
India U-19 World champions attended senior match as spectators வாங்க சீனியர்களை பார்க்கலாம்..! இந்திய U-19 அணிக்கு பிசிசிஐ அளித்த கௌரவம்..! சர்ப்ரைஸ் காத்திருக்கு!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X