இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 2வது நாள் முடிவில் ஆஸி 237/6; 48 ரன்கள் முன்னிலை!

பெங்களூரு: இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ,2வது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்து 48 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. பெங்களூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த 2வது போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 189 ரன்கள் மட்டுமே எடுத்தது, இதையடுத்து நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்திருந்தது.

இன்றைய 2-வது நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணியின் வார்னர் (33 ரன்கள்) எடுத்த நிலையில் அஸ்வினின் சுழல் பந்து வீச்சில் வீழ்ந்தார். அதன் பின் ஆட்டத்தை வலுப்படுத்திய ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் (8 ரன்கள்) நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை.

ரென்ஷா (60 ரன்கள்), ஷான் மார்ஷ் (66 ரன்கள்) ஆகியோர் அரைசதம் அடித்து வெளியேறினர். இன்றைய 2- வது நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியைவிட 48 ரன்கள் முன்னிலை வகிக்கிறது ஆஸ்திரேலியா. வேட் (25), ஸ்டார்க் (14) அவுட்டாகாமல் உள்ளனர். இந்திய அணி சார்பில் ரவிந்திர ஜடேஜா அதிகபட்சமாக 3 விக்கெட் கைப்பற்றினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
India Vs Australia 2017, 2nd Test Day 2 , Australia lead by 48 runs. That is stumps on day two. Australia end with 237/6 on board and lead by 48 runs. A hard fought day for them but they are in comfortable position. Mathew Wade and Mitchell Starc are the two unbeaten batsmen.
Story first published: Sunday, March 5, 2017, 17:36 [IST]
Other articles published on Mar 5, 2017
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X