For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியை பார்க்க ஆசை ஆசையாய் அத்துமீறி உள்ளே வந்த ரசிகர்.. அப்புறம் என்ன நடந்துச்சு தெரியுமா?

நாக்பூர் : தோனியை பார்க்க ரசிகர்கள் பலமுறை மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அதே போல நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோனி ரசிகர் ஒருவர் மைதானத்துக்கு உள்ளே ஓடி வந்தார்.

ஆனால், இந்த ரசிகரை தோனி டீல் செய்த விதமே வேறு மாதிரி இருந்தது. அப்படி என்ன தான் செய்தார்?

அத்துமீறி வந்த ரசிகர்

அத்துமீறி வந்த ரசிகர்

இரண்டாம் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. 250 ரன்கள் குவித்த இந்தியா, அடுத்து பந்துவீச்சுக்கு தயாராகியது. இந்திய வீரர்கள் மைதானத்துக்குள் நுழைந்தனர். அப்போது தோனி ரசிகர் ஒருவர் காவலர்களை மீறி உள்ளே மைதானத்துக்குள் நுழைந்தார்.

ஆட்டம் காட்டிய தோனி

"தல" என குறிப்பிட்ட டி-சர்ட் அணிந்திருந்த அந்த தோனி ரசிகர் தோனியை தொட முயன்றார். தோனி, மற்றொரு வீரர் பின்னே ஒளிந்து கொண்டு மாற்றி மாற்றி ஓடி ஆட்டம் காட்டினார்.

திருடன் - போலீஸ் ஆடினர்

திருடன் - போலீஸ் ஆடினர்

ஒரு கட்டத்தில் தோனி வேகமாக ஓட, அந்த ரசிகர் தோனியை துரத்த, இது என்ன கிரிக்கெட் போட்டியா? இல்ல நம்மா ஊர்ல விளையாடுற திருடன் - போலீஸ் ஆட்டமா என சந்தேகமே வந்து விட்டது.

பிட்ச் வரை..

பிட்ச் வரை..

தோனியும், அந்த ரசிகரும் ஓடி, ஓடி பிட்ச் வரை வந்து விட்டனர். இதற்கும் மேல் ஓடினால் பிட்ச் சேதம் ஆகி விடும் என்பதால் தோனி அதோடு நின்று விட்டார். அந்த ரசிகரும் தோனியை பிடித்து விட்டார்.

வீரர்கள் ரசித்தனர்

வீரர்கள் ரசித்தனர்

பின்னர், தோனி கால்களில் விழுந்து, கட்டிப் பிடித்து விட்டு, காவலர்களிடம் "உதை" வாங்க சென்று விட்டார். இந்த ஓடிப் பிடித்து விளையாட்டை மற்ற வீரர்கள் சிரித்து ரசித்துக் கொண்டு இருந்தனர்.

வெறுப்பில்லாத தோனி

வெறுப்பில்லாத தோனி

தோனி உண்மையில் எத்தனை நகைச்சுவையான மனிதர் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி. அந்த ரசிகர் அருகில் வந்த போது, தோனி இம்மி அளவு கூட வெறுப்பை காட்டவில்லை. புன்னகையுடன் தான் இருந்தார்.

இது நல்லதல்ல!

இது நல்லதல்ல!

அதே சமயம், ரசிகர்கள் அத்துமீறி மைதானம் உள்ளே நுழைவது அத்தனை நல்லதல்ல. அவர்கள் இதனால், பல பிரச்சனைகளுக்கு உள்ளாக நேரிடும். உண்மையான ரசிகர்கள் தவிர, சிலர் நண்பர்களிடம் பந்தயம் கட்டி விட்டு உள்ளே நுழைவதும் நடக்கிறது. அதுவும் தவிர்க்கப்பட வேண்டும்.

Story first published: Tuesday, March 5, 2019, 20:10 [IST]
Other articles published on Mar 5, 2019
English summary
India vs Australia 2019 : Dhoni made fun of a fan who chased him
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X