For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி, கங்குலியை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை! “ரன் மெஷின்” என மீண்டும் நிரூபித்த கேப்டன் கோலி!

ராஞ்சி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் படு சுமாராக இருந்தாலும், கேப்டன் விராட் கோலி மட்டும் வழக்கம் போல தனியாக ஆடி சதம் அடித்தார்.

மேலும், இந்த இன்னிங்க்ஸில் 27 ரன்கள் அடித்து இருந்த போது கோலி, கேப்டனாக 4,000 ஒருநாள் போட்டி ரன்களை கடந்தார்.

<strong>உலக கோப்பைக்கு பிறகும் தோனி விளையாடவேண்டும்.. கங்குலி ஆதரவு </strong>உலக கோப்பைக்கு பிறகும் தோனி விளையாடவேண்டும்.. கங்குலி ஆதரவு

மைல்கல் சாதனை

மைல்கல் சாதனை

இந்த மைல்கல் ரன்களை அவர் 66 போட்டிகளில், 63 இன்னிங்க்ஸ்களில் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கேப்டனாக 4000 ரன்களை எட்டிய நான்காவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் கோலி.

4வது இந்திய கேப்டன்

4வது இந்திய கேப்டன்

இதற்கு முன், அசாருதீன், கங்குலி, தோனி ஆகிய மூன்று கேப்டன்கள் மட்டுமே இந்த சாதனையை செய்திருந்தனர். கோலி இந்த பட்டியலில் நான்காவதாக இணைந்துள்ளார். மேலும், உலகளவில் ஒரு முக்கிய சாதனையை செய்துள்ளார் கேப்டன் கோலி.

விரைவாக 4,000 ரன்கள்

விரைவாக 4,000 ரன்கள்

உலகளவில் மிக விரைவாக 4,000 ரன்களை எட்டிய கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் விராட் கோலி. விராட் கோலி 63 இன்னிங்க்ஸ்களில் 4,000 ரன்கள் மைல்கல்லை எட்டியுள்ளார்.

அடுத்த இடங்களில்

அடுத்த இடங்களில்

இவருக்கு அடுத்த இடங்களில் ஏபி டிவில்லியர்ஸ் - 77 இன்னிங்க்ஸ், தோனி - 100 இன்னிங்க்ஸ், கங்குலி - 103 இன்னிங்க்ஸ், சனத் ஜெயசூர்யா - 106 இன்னிங்க்ஸ், ஆகியோர் உள்ளனர். ஏற்கனவே, பல ஜாம்பவன்களின் சாதனைகளை தகர்த்து எறிந்துள்ள கோலி, இந்த சாதனையையும் முறியடித்துள்ளார்.

அதிக ரன்கள் அடித்த கேப்டன்கள்

அதிக ரன்கள் அடித்த கேப்டன்கள்

இந்திய அளவில் அதிக ரன்கள் அடித்த கேப்டன்கள் வரிசையில் தற்போது கோலி நான்காம் இடத்தில் இருக்கிறார். தோனி - 6641 ரன்கள், அசாருதீன் - 5239 ரன்கள், கங்குலி - 5104 ரன்கள் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

Story first published: Friday, March 8, 2019, 21:00 [IST]
Other articles published on Mar 8, 2019
English summary
India vs Australia 3rd ODI : Kohli crosses 4000 runs as captain. And he becomes a quickest ever captain to cross this feat.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X