இந்தியா Vs ஆஸி. தொடரை தீர்மானிக்கும் 3வது டி20.. ஆடுகளம் எப்படி ? பிளேயிங் லெவன்..டாஸ் வென்றால் என்ன

ஐதராபாத் : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறுகிறது.

இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றுவிடும்.

நாக்பூரில் மழை காரணமாக ஆட்டம் 8 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது அனைவரின் பார்வையும் ஐதராபாத் வானிலை எப்படி இருக்கிறது என்ற பக்கம் திரும்பியுள்ளது.

 தோனியின் சகாப்தம்.. இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவு.. டி20 உலக கோப்பையை வென்றது எப்படி ? தோனியின் சகாப்தம்.. இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவு.. டி20 உலக கோப்பையை வென்றது எப்படி ?

ஆடுகளம்

ஆடுகளம்

இந்த நிலையில், ஐதராபாத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது. ஆனால் இன்று மேகமூட்டத்துடன் வானம் இருக்கும். வெப்பநிலையும் குறைந்து காணப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஐதராபாத் ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் டாஸ் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

டாஸ்

டாஸ்

கடைசியாக நடைபெற்ற 16 டி20 போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த அணி 8 முறையும், டாஸ் வென்று முதலில் பந்துவீசிய அணி 8 முறையும் வென்று இருக்கிறது. கடைசியாக 2019ஆம் ஆண்டு தான் ஐதராபாத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று இருக்கிறது. கடைசியாக இங்கு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் விராட் கோலி 50 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார்.

மாற்றம்

மாற்றம்

இந்திய அணியில் இன்றைய ஆட்டத்தில் சாஹலுக்கு பதில் அஸ்வின் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று ரிஷப் பண்டுக்கு பதில் புவனேஸ்வர் குமார், கடைசி டி20 போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலிய அணியில் எவ்வித மாற்றமும் செய்ய வாய்ப்பில்லை.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

ரோகித் சர்மா 2, கேஎல் ராகுல், 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, ஹர்திக் பாண்டியா, 6, தினேஷ் கார்த்திக், 7, அக்சர் பட்டேல், 8, புவனேஸ்வர் குமார், 9, பும்ரா, 10, அஸ்வின், 11,ஹர்சல் பட்டேல்

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
India vs Australia 3rd t20I –Pitch report – Preview and Playing xi
Story first published: Sunday, September 25, 2022, 10:47 [IST]
Other articles published on Sep 25, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X