For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வடை போச்சே! 5 ரன்னில் சதத்தை தவறவிட்ட ரோஹித்.. இருந்தாலும் மகிழ்ச்சி தான்! ஏன் தெரியுமா?

மொஹாலி : ரோஹித் சர்மா 4வது ஒருநாள் போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடி 95 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தற்போது நடந்து அரும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி சிறப்பான துவக்கத்தை பெறவில்லை

இப்ப என்ன சொல்றீங்க.. பேட்டால் பதில் சொன்ன ரோகித், தவான்.. ஆஸி.க்கு எதிராக புதிய சாதனைஇப்ப என்ன சொல்றீங்க.. பேட்டால் பதில் சொன்ன ரோகித், தவான்.. ஆஸி.க்கு எதிராக புதிய சாதனை

தடுமாற்றம்

தடுமாற்றம்

இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா - தவான் இருவருமே மூன்று போட்டிகளிலும் தங்கள் இயல்பான ஆட்டத்தை ஆடவில்லை. ரன்னும் குவிக்கவில்லை. இதனால், உலகக்கோப்பைக்கு தயாராகி வரும் இந்திய அணி குறித்த கவலைகள் எழுந்தன.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இந்நிலையில், நான்காவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு இருவரும் அதிரடி துவக்கம் அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு 193 ரன்கள் சேர்த்த நிலையில், ரோஹித் சர்மா 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பறி போன சதம்

பறி போன சதம்

இன்னும் ஐந்து ரன்கள் எடுத்திருந்தால், தன் 23வது ஒருநாள் போட்டி சதத்தை நிறைவு செய்திருக்கலாம் என்ற நிலையில், ரோஹித் சர்மா 95 ரன்களுடன் வெளியேறினார். இந்த வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், ரோஹித் சர்மா ஐந்து போட்டிகளுக்கு பின் அரைசதம் அடித்தது, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

நியூசிலாந்துக்குப் பின்

நியூசிலாந்துக்குப் பின்

கடைசியாக நியூசிலாந்து ஒருநாள் தொடரில் இரண்டு அரைசதங்கள் அடித்திருந்தார் ரோஹித் சர்மா. ஆஸ்திரேலிய தொடரின் முதல் மூன்று போட்டிகளில் 37 (66 பந்துகளில்), 0, 14 என சொற்ப ரன்கள் எடுத்து வந்த நிலையில் நான்காவது போட்டியில் சறுக்கலில் இருந்து மீண்டுள்ளார்.

கூட்டணி சாதனைகள்

கூட்டணி சாதனைகள்

இந்த போட்டியில் ரோஹித் சர்மா - தவான் 193 ரன்கள் சேர்த்து மொஹாலி மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச கூட்டணி ரன்கள் சென்ற சாதனையை செய்தது. மேலும், சச்சின் - சேவாக் கூட்டணியை முந்தி இந்திய அளவில் அதிக ரன்கள் சேர்த்த கூட்டணி பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது.

ரோஹித் அதிக சிக்ஸர்

ரோஹித் அதிக சிக்ஸர்

இந்த போட்டியில் ரோஹித் சர்மா 2 சிக்ஸர்கள் அடித்து இந்திய அளவில் அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் 218 சிக்ஸர்களுடன் முதல் இடத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டார். முன்னதாக தோனி இதே தொடரில் 217 சிக்ஸர்கள் அடித்து ரோஹித்தை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்து இருந்தார்.

Story first published: Sunday, March 10, 2019, 16:59 [IST]
Other articles published on Mar 10, 2019
English summary
India vs Australia 4th ODI : Rohit Sharma come back in this series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X