For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது மட்டும் நடக்காம இருந்திருந்தா.. டீமை விட்டே தூக்கி இருப்பார் கோலி.. தப்பிய துணை கேப்டன்!

மும்பை : இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணி துணை கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய தொடரில் இருந்தும் நீக்கப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

அதே போல, டெஸ்ட் அணி துணை கேப்டன் அஜின்க்யா ரஹானேவும் கூட அணியில் தன் வாய்ப்பை இழக்கக் கூடும் என்ற பேச்சு இருந்தது.

அந்த அளவுக்கு ஐபிஎல் தொடரில் மோசமாக ஆடி வந்தார் அஜின்க்யா ரஹானே.

ஐபிஎல்-இல் மட்டும் ஆடுவீங்களா? அடம் பிடிக்கும் தோனி.. இதுதான் நடக்கும்.. எச்சரிக்கும் ஜாம்பவான்கள்!ஐபிஎல்-இல் மட்டும் ஆடுவீங்களா? அடம் பிடிக்கும் தோனி.. இதுதான் நடக்கும்.. எச்சரிக்கும் ஜாம்பவான்கள்!

ஐபிஎல் - டெஸ்ட் தொடர்

ஐபிஎல் - டெஸ்ட் தொடர்

ஐபிஎல் தொடர் செயல்பாட்டை வைத்து டெஸ்ட் அணியில் ஒருவரை நீக்க முடியாது என்றாலும், இந்த முறை ஆஸ்திரேலிய தொடருக்கு சில வீரர்கள் ஐபிஎல் தொடரின் செயல்பாட்டை வைத்துத் தான் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதனால், ரஹானே சரியாக ஆடாவிட்டால் ஆஸ்திரேலிய தொடரில் ஓரிரு போட்டிகளுக்கு பின் நீக்கப்படவும் வாய்ப்பு இருந்தது.

ஆஸ்திரேலிய தொடர்

ஆஸ்திரேலிய தொடர்

2020 ஐபிஎல் தொடர் முடிந்த உடன் இந்திய அணி ஆஸ்திரேலியா செல்ல உள்ளது. அங்கே ஒருநாள் தொடர், டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. அந்த மூன்று தொடர்களுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

கேஎல் ராகுல் நிலை

கேஎல் ராகுல் நிலை

அதில் டெஸ்ட் அணியில் கேஎல் ராகுல் சேர்க்கப்பட்டு இருந்தார். அவர் கடந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் அணியில் சேர்க்கப்படவில்லை. அவரது டெஸ்ட் பேட்டிங் பார்ம் மோசமாக இருந்ததாகக் கூறி அவரை அப்போது நீக்கி இருந்தது இந்திய அணி.

விமர்சனம்

விமர்சனம்

ஆனாலும், இந்த முறை அவரது ஐபிஎல் செயல்பாட்டை கணக்கில் கொண்டு அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார். அது விமர்சனத்துக்கு உள்ளானது. ராகுலுக்கு அணியில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது. அவருக்கு போட்டிகளில் பங்கேற்கவும் வாய்ப்பு அளிக்கப்படும் என கூறப்பட்டது.

துவக்க வீரர்கள்

துவக்க வீரர்கள்

கேஎல்ராகுல் துவக்க வீரர் எனும் நிலையில் மயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, ஷுப்மன் கில் என டெஸ்ட் அணியில் ஏற்கனவே மூன்று துவக்க வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களை மீறி ராகுலுக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும்? என்ற கேள்வி எழுந்தது.

மிடில் ஆர்டர் போட்டி

மிடில் ஆர்டர் போட்டி

மறுபுறம், ராகுல் மிடில் ஆர்டரிலும் பேட்டிங் செய்துள்ளார் என்பதால் அவருக்கு மிடில் ஆர்டரில் ஆட வாய்ப்பு கிடைக்கக் கூடும் என கருதப்பட்டது. மிடில் ஆர்டரில் விராட் கோலிக்கு பின் அஜின்க்யா ரஹானே, ஹனுமா விஹாரி மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

ரஹானே பார்ம்

ரஹானே பார்ம்

இதில் அஜின்க்யா ரஹானே ஐபிஎல் தொடரில் மோசமான பார்மில் இருந்தார். டெல்லி கேபிடல்ஸ் அணியில் அவரை நம்பி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பல போட்டிகளில் வாய்ப்பு அளித்த போதும் அவரால் அணிக்கு உதவும் வகையில் ஆட முடியவில்லை.

60 ரன் அடித்தார்

60 ரன் அடித்தார்

இந்த நிலையில், பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் வென்றால் தான் பிளே-ஆஃப் செல்லலாம் என்ற நிலையில் ரஹானே 60 ரன்கள் குவித்து டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அத்துடன் மீண்டும் தன் பார்மை நிரூபித்தார்.

தப்பித்தார்

தப்பித்தார்

ரஹானே இந்த 60 ரன்கள் மூலம் பார்மை நிரூபித்ததால் ஆஸ்திரேலிய தொடரில் அவரை அத்தனை எளிதில் நீக்கி விட முடியாது என்ற நிலை உருவாகி உள்ளது. ராகுல் மிடில் ஆர்டரில் இடம் கிடைக்காமல் போனால் துவக்க வீரராக களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Story first published: Tuesday, November 3, 2020, 20:24 [IST]
Other articles published on Nov 3, 2020
English summary
India vs Australia : Ajinkya Rahane cements his spot in test team
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X