For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பெரிய தப்பாயிடும்.. கோலியை பார்த்து காப்பி அடிக்காதீங்க.. சீனியர் வீரருக்கு பறந்த வார்னிங்!

சிட்னி : அஜின்க்யா ரஹானே, விராட் கோலியை காப்பி அடிக்கக் கூடாது என ஹர்பஜன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அது பெரிய தவறாக மாறி விடும் என ஹர்பஜன் சிங் வார்னிங் கொடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு ரஹானே தான் இந்திய அணியின் கேப்டனாக இருக்கப் போகிறார் என்பதாலேயே இதை கூறி உள்ளார் ஹர்பஜன் சிங்

ரஹானே

ரஹானே

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணியின் மூத்த வீரரும், துணை கேப்டனுமான அஜின்க்யா ரஹானே திடீரென முக்கியத்துவம் பெற்றுள்ளார். அதற்கு காரணம் விராட் கோலி விடுப்பு எடுத்துக் கொள்ள இருப்பதுதான்.

கோலி விடுப்பு

கோலி விடுப்பு

கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் முழுமையாக பங்கேற்பார். அதன் பின் முதல் டெஸ்ட் போட்டி முடிந்த உடன் இந்தியா கிளம்ப உள்ளார். அவரது மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், குழந்தைப்பேறின் போது அருகே இருக்க அவர் விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார்.

அணியின் கேப்டன்

அணியின் கேப்டன்

இந்த நிலையில், கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு டெஸ்ட் அணியின் துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே கேப்டனாக செயல்பட இருக்கிறார். இது தன்னை நிரூபிக்க அவருக்கு பெரிய வாய்ப்பு என பொதுவான கருத்து இருந்தாலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்தத் தொடர் அத்தனை எளிதானது இல்லை.

ஆக்ரோஷம் - அமைதி

ஆக்ரோஷம் - அமைதி

கேப்டனாக விராட் கோலி களத்தில் மொத்த ஆஸ்திரேலிய அணிக்கும் ஈடுகொடுப்பார். அந்த அளவுக்கு ஆக்ரோஷமாக நடந்து கொள்வார். ஆனால், ரஹானே அதற்கு நேர் எதிர் குணம் கொண்டவர். களத்தில் என்ன நடந்தாலும் அமைதி காப்பார்.

ஆஸி. அணியை வீழ்த்த முடியுமா?

ஆஸி. அணியை வீழ்த்த முடியுமா?

ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் வரவுக்கு பின் வலுவாக மாறி உள்ளது. மார்னஸ் லாபுஷாக்னே போன்ற நல்ல பேட்ஸ்மேன்களும் உள்ளனர். இவர்கள் மூவரும் கடந்த முறை டெஸ்ட் தொடரில் இடம் பெறவில்லை. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியை கேப்டனாக ரஹானேவால் வீழ்த்த முடியுமா?

ஆக்ரோஷம் தேவையா?

ஆக்ரோஷம் தேவையா?

அமைதியான அஜின்க்யா ரஹானேவும், கோலி போல ஆக்ரோஷமாக மாறி ஆஸ்திரேலிய அணிக்கு ஈடு கொடுத்து இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தலாம். ஆனால், அது தவறாக செல்ல வாய்ப்பு உள்ளதாக சுழற் பந்துவீச்சாளர் வீரர் ஹர்பஜன் சிங் கூறி உள்ளார்.

ஹர்பஜன் சிங் எச்சரிக்கை

ஹர்பஜன் சிங் எச்சரிக்கை

"ரஹானே மிகவும் அமைதியானவர். வெளிப்படையாக தன்னை வெளிக் காட்டிக் கொள்ளமாட்டார். அவர் விராட் கோலியை விட வித்தியாசமானவர். ரஹானேவுக்கு ஒரு விஷயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். அவர் தன் ஆட்டத்தையோ, குணத்தையோ மாற்றிக் கொள்ள அவசியமில்லை" என்றார்.

நீங்களாக இருங்கள்

நீங்களாக இருங்கள்

"விராட் கோலியின் குணத்தை பார்த்து, நாமும் அது போல நடந்து கொண்டு ஆஸ்திரேலியாவை வீழ்த்தலாம் என அவர் நினைக்கக் கூடும். ஆனால், அது தேவையற்றது. ரஹானே செய்ய வேண்டியதெல்லாம் தாமாகவே இருந்து, அணியின் சிறந்த ஆட்டத்தை வெளிக் கொண்டு வந்தால் போதும்" என்றார் ஹர்பஜன் சிங்.

அணிக்கு இழப்பு

அணிக்கு இழப்பு

மேலும், விராட் கோலியை ஒரு வீரராகவும், கேப்டனாகவும் ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா இழக்கும் என கூறினார் ஹர்பஜன். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி சிறந்த ரெக்கார்டு வைத்திருப்பதை அவர் சுட்டிக் காட்டினார். கோலி இல்லாத நிலையில் ரஹானேவுக்கு பெரும் சவால்கள் காத்துக் கொண்டுள்ளது.

கேள்வி

கேள்வி

ரஹானே களத்தில் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை விட அணியை எப்படி சரி சமமாக தேர்வு செய்யப் போகிறார் என்பதே பெரிய கேள்வியாக அமைந்துள்ளது. கோலிக்கு பதில் யார் நான்காம் வரிசையில் பேட்டிங் செய்யப் போகிறார்கள்? என்ற கேள்விக்கு அவர் விடை கண்டுபிடிக்க வேண்டும்.

Story first published: Friday, November 20, 2020, 13:31 [IST]
Other articles published on Nov 20, 2020
English summary
India vs Australia : Ajinkya Rahane should not copy Kohli says Harbhajan Singh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X