For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவசர அவசரமாக.. ஒரு வாரம் கூட பொறுக்காத பிசிசிஐ.. ரோஹித் சர்மா பதவியை பறிக்க திட்டம்?!

மும்பை : ரோஹித் சர்மா நிலை குறித்து தெரிந்து கொள்ளாமல் இந்திய அணிக்கு அவசர அவசரமாக துணை கேப்டனை அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

2020 ஐபிஎல் தொடர் முடிந்த உடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.

அந்த தொடருக்கான அணியில் ரோஹித் சர்மா இடம் பெறவில்லை. அவரது துணை கேப்டன் பதவி வேறு ஒரு வீரருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பிசிசிஐ மீது சந்தேகம் எழுந்துள்ளது.

கோலி போட்ட திட்டம்.. வலையில் சிக்கிய மும்பை இந்தியன்ஸ் டீம்.. என்ன நடக்கப் போகுதோ?கோலி போட்ட திட்டம்.. வலையில் சிக்கிய மும்பை இந்தியன்ஸ் டீம்.. என்ன நடக்கப் போகுதோ?

இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்

இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இந்த மூன்று தொடர்களுக்கான இந்திய அணி ஒரே நாளில் அறிவிக்கப்பட்டது. அதில் மிக முக்கியமான ஒரு சர்ச்சை கிளம்பி இந்திய கிரிக்கெட் உலகை ஆட்டிப் படைத்தது வருகிறது.

ரோஹித் சர்மா நீக்கம்

ரோஹித் சர்மா நீக்கம்

ரோஹித் சர்மா மூன்று அணிகளிலும் தேர்வு செய்யப்படவில்லை. அது மட்டுமின்றி அவரது துணை கேப்டன் பதவி வேறு ஒரு வீரருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் மாற்று துவக்க வீரராக இருந்து, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக உயர்ந்திருக்கும் கேஎல் ராகுல் துணை கேப்டன் பதவியை பெற்றுள்ளார்.

காயம்

காயம்

ரோஹித் சர்மா காயமடைந்து இருப்பதால் அவரை அணியில் தேர்வு செய்யவில்லை என பிசிசிஐ கூறி உள்ளது. அவரி பிசிசிஐ மருத்துவர்கள் கண்காணித்து வருவதாக கூறி உள்ளது. அதே சமயம், தற்போது காயத்துடன் இருக்கும் மயங்க் அகர்வால் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒருவரை மட்டுமே நீக்கியது ஏன்?

ஒருவரை மட்டுமே நீக்கியது ஏன்?

ஐபிஎல் தொடரில் காயத்தில் இருக்கும் இரு வீரர்களில் ஒருவரை மட்டும் தேர்வு செய்து, ஒருவரை நீக்கி இருப்பது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. சிலர் ரோஹித் சர்மாவின் காயம் பெரிது என்பதால் பிசிசிஐ இவ்வாறு முடிவு செய்துள்ளதாக கூறி வருகின்றனர்.

உண்மை என்ன?

உண்மை என்ன?

ஆனால், ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் கூடாரத்தில் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார். அது குறித்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் திட்டமிட்டு வெளியிட்டுள்ளது. ரோஹித் சர்மாவுக்கு பெரிய காயம் ஏதுமில்லை என அந்த அணி இதன் மூலம் கூறி உள்ளது.

துணை கேப்டன் சர்ச்சை

துணை கேப்டன் சர்ச்சை

இந்த நிலையில், பெரிய காயம் இல்லாத நிலையில், ஆஸ்திரேலிய தொடர் துவங்க இன்னும் ஒரு மாத காலம் இருக்கும் நிலையில் ரோஹித் சர்மா இந்திய அணியில் இணைய அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால், அதற்குள் புதிய துணை கேப்டனை அறிவித்துள்ளது பிசிசிஐ.

என்ன அவசரம்?

என்ன அவசரம்?

ரோஹித் சர்மா நிலை குறித்து முழுமையாக தெரியும் முன் வேறு ஒரு துணை கேப்டனை அறிவிப்பதில் பிசிசிஐக்கு அப்படி என்ன அவசரம்? என இயல்பாகவே எண்ணத் தோன்றுகிறது. இதே விஷயத்தை பற்றி முன்னாள் இந்திய வீரர் தீப் தாஸ் குப்தாவும் பேசி உள்ளார்.

தீப் தாஸ் குப்தா கருத்து

தீப் தாஸ் குப்தா கருத்து

தீப் தாஸ் குப்தா கூறுகையில், ரோஹித் சர்மா உடற்தகுதியுடன் இருந்தால் நிச்சயம் இந்திய அணியில் அவர் இடம் பெற வேண்டும். துணை கேப்டனை அறிவிப்பதை பிசிசிஐ நிறுத்தி வைத்திருக்கலாம். இன்னும் ஒரு வாரம் காத்திருந்து ரோஹித் காயம் குறித்து அறிந்த பின் இது பற்றி அறிவித்து இருக்கலாம் என்றார்.

ரோஹித் ஓரங்கட்டப்படுகிறாரா?

ரோஹித் ஓரங்கட்டப்படுகிறாரா?

பிசிசிஐ செய்ததை பார்க்கும் போது ரோஹித் சர்மாவை ஓரங்கட்ட முயற்சிகள் நடக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பிசிசிஐ தரப்பில் இதுவரை வெளிப்படையாக எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. ரோஹித் சர்மாவும் மௌனம் காத்து வருகிறார்.

கோலி - ரோஹித் விரிசல்

கோலி - ரோஹித் விரிசல்

இதற்கிடையே ரசிகர்கள் இடையே விராட் கோலி - ரோஹித் சர்மா இடையே கடந்த 2019 உலகக்கோப்பை தொடரின் முடிவில் விரிசல் ஏற்பட்டதாக எழுந்த செய்திகளை சுட்டிக் காட்டி உள்ளனர். அது தான் ரோஹித் சர்மாவை தற்போது இந்திய அணியில் ஒதுக்க காரணமா?

Story first published: Wednesday, October 28, 2020, 19:55 [IST]
Other articles published on Oct 28, 2020
English summary
India vs Australia : BCCI could have wait for 1 week to announce vice captain
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X