For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லை.. செமயாக சிக்கிய வீரர்கள்.. மெகா திட்டம்.. பிசிசிஐ எடுத்த பகீர் முடிவு

மும்பை : இந்திய அணி வீரர்களை வைத்து மெகா திட்டம் போட்டுள்ளது பிசிசிஐ.

இந்திய கிரிக்கெட் அணிக்கு 2020ஆம் ஆண்டின் பெரும் பகுதி கொரோனா வைரஸ் குறித்த அச்சம் மற்றும் லாக்டவுன் காரணமாக வெட்டியாக கழிந்த நிலையில், 2021இல் சேர்த்து வைத்து வேலை வாங்க உள்ளது பிசிசிஐ.

2021 மட்டுமின்றி 2022 மற்றும் 2023 வரை இப்போதே பெரிய திட்டம் போட்டு வைத்துள்ளது. இந்திய வீரர்களுக்கு நீண்ட கால ஓய்வு கிடைக்க வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது.

 இளம் துவக்க ஆட்டக்காரருடன் சட்டையில்லாமல் ஆட்டம் போட்ட ஷிகர் தவான்... தவானின் மறுபக்கம் இளம் துவக்க ஆட்டக்காரருடன் சட்டையில்லாமல் ஆட்டம் போட்ட ஷிகர் தவான்... தவானின் மறுபக்கம்

2020ஆம் ஆண்டு

2020ஆம் ஆண்டு

2020ஆம் ஆண்டு கிரிக்கெட்டுக்கு மோசமான ஆண்டாக அமைந்தது. ஆண்டின் துவக்கத்தில் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் முடங்கின. இந்திய அணி மார்ச் மாதம் முதல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் முடங்கி இருந்தது.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

பிசிசிஐ கடும் முயற்சி எடுத்து பிரம்மாண்டமான 2020 ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி முடித்தது. அந்த தொடரின் வெற்றியை அடுத்து வீரர்களை பாதுகாப்பு வளையத்தில் வைத்துக் கொண்டே கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க முடிவு செய்தது.

ஆஸ்திரேலிய தொடர்

ஆஸ்திரேலிய தொடர்

2௦20 ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு நவம்பர் இறுதியில் துவங்கும் ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்க இந்திய வீரர்கள் கிளம்பினர். அந்த தொடர் ஜனவரி 17 வரை நடைபெற உள்ளது. அந்த தொடர் முடிந்த உடன் இந்திய வீரர்கள் ஓய்வெடுக்க செல்ல முடியாது.

தயாரான பிசிசிஐ

தயாரான பிசிசிஐ

ஆம், பிசிசிஐ 2020இல் கைவிட்ட கிரிக்கெட் தொடர்களை தூசி தட்டி எடுத்து வைத்துள்ளது. மற்ற அணிகளுடன் இரு தரப்பு கிரிக்கெட் ஒப்பந்தம் இருப்பதால் பிசிசிஐ அந்த தொடர்களை ஆடாமல் தட்டிக் கழிக்க முடியாது. எனவே, 2021ஆம் ஆண்டு முழுவதும் நெருக்கமாக இந்திய அணியை தொடர்களில் பங்கேற்க வைக்க முடிவு செய்துள்ளது.

2021 திட்டம்

2021 திட்டம்

2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் இருந்து இந்தியா வரும் வீரர்கள் அடுத்து இந்தியா வரும் இங்கிலாந்து அணியுடன் ஆட திட்டமிட்டு வருகிறது பிசிசிஐ. இந்த தொடர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் நடக்க வேண்டியது. இந்த தொடர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

ஆசிய கோப்பை

ஆசிய கோப்பை

அடுத்ததாக ஜூன் மாதம் இலங்கைக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கேயே ஆசிய கோப்பை 2021 தொடரில் பங்கேற்க உள்ளது. ஜூலை மாதம் ஜிம்பாப்வே சென்று, பின் இங்கிலாந்து நாட்டில் டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது இந்திய அணி.

உலகக்கோப்பை தொடர்

உலகக்கோப்பை தொடர்

இந்த தொடர் செப்டம்பர் வரை நடக்கும். அதன் பின் அக்டோபரில் தென்னாப்பிரிக்க அணி இந்தியா வர உள்ளது. மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் இரு அணிகளும் மோத உள்ளன. அடுத்து அக்டோபரில் இந்தியாவில் டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ளது.

இன்னும் இருக்கு!!

இன்னும் இருக்கு!!

நவம்பரில் நியூசிலாந்து அணி இந்தியாவில் இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. டிசம்பர் மாதம் இந்திய அணி தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளது. அங்கே மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

2022 திட்டம்

2022 திட்டம்

அத்துடன் 2022 ஆண்டிற்கும் திட்டம் தயாராக உள்ளது. அந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் ஐபிஎல் தொடர்களை தவிர்த்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுடன் மோத உள்ளது.

வீரர்களுக்கு ஓய்வே இல்லை

வீரர்களுக்கு ஓய்வே இல்லை

பிசிசிஐயின் இந்த நீண்ட கால திட்டத்தால் தொடர்களுக்கு இடையே இந்திய அணியின் முக்கிய வீரர்கள் அதிக ஓய்வின்றி ஆட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளனர். மேலும், பாதுகாப்பு வளையத்துக்குள் வீரர்கள் இருக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.

Story first published: Thursday, November 19, 2020, 14:24 [IST]
Other articles published on Nov 19, 2020
English summary
India vs Australia : BCCI planned non stop scheudle for Indian team in 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X