கோலிக்கு டீம் முக்கியமே இல்லை.. தோனி இப்படியா நடந்து கொண்டார்? எல்லை மீறிய ரசிகர்கள்!

துபாய் : விராட் கோலி தன் குழந்தை பிறப்பை ஒட்டி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பாதியில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார்.

அது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது. தேசிய அணிக்காக முக்கிய தொடரில் ஆடுவதை விட குடும்பம் முக்கியமா? என சிலர் எல்லை மீறி விமர்சனம் செய்து முகம் சுளிக்க வைத்துள்ளனர்.

தோனி 2015 உலகக்கோப்பை தொடருக்கு முன் எடுத்த முடிவை சுட்டிக் காட்டியும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

2௦20 ஐபிஎல் தொடர் முடிந்த நிலையில் இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கே ஒருநாள் தொடர், டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இதில் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து கோலி விடுப்பு எடுத்துள்ளார்.

புள்ளிகள் முக்கியம்

புள்ளிகள் முக்கியம்

இந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதி என்பதால் இந்த தொடரில் வெற்றி பெற்று புள்ளிகள் பெறுவது மிகவும் முக்கியம். அதற்கு இந்திய அணி முழு பலத்துடன் களமிறங்க வேண்டும்.

கோலி விடுப்பு

கோலி விடுப்பு

இந்த நிலையில் தான் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் தொடரில் முதல் போட்டி முடிந்த உடன் தான் இந்தியா செல்ல பிசிசிஐ-யிடம் அனுமதி பெற்றுள்ளார். தன் மனைவிக்கு குழந்தை பிறக்க உள்ளதால் அவர் கடைசி மூன்று போட்டிகளில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார்.

பலவீனம் அடையும்

பலவீனம் அடையும்

விராட் கோலி டெஸ்ட் தரவரிசையில் முன்னணியில் இருக்கும் பேட்ஸ்மேன். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்துக்கு கடும் போட்டி அளிக்கக்கூடிய ஒரே பேட்ஸ்மேன் இவர் மட்டுமே. அவர் இந்திய அணியில் இடம் பெறாமல் போனால், அணியின் பேட்டிங் பலவீனம் அடையும்.

ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் பாலர் கோலியின் இந்த முடிவை விமர்சனம் செய்துள்ளனர். இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன் இல்லாமல் இந்திய அணி எபப்டு ஆஸ்திரேலியாவில் வெற்றி பெறும் எனவும், அதனால் தான் தோனி ஸ்பெஷல் என அவர் 2015 உலகக்கோப்பை தொடருக்கு முன் நடந்து கொண்டதை குறிப்பிட்டுள்ளனர்.

தோனி என்ன செய்தார்?

தோனி என்ன செய்தார்?

2015 உலகக்கோப்பை தொடருக்கு முன் தோனியின் மகள் ஸிவா பிறந்தார். அப்போது உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சிப் போட்டிகளில் ஆடி வந்தார் தோனி. அவர் இந்தியா செல்லவில்லை. மாறாக தேசிய கடமை தான் முக்கியம். மற்ற அனைத்தும் காத்திருக்கலாம் என்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தனிப்பட்ட வாழ்க்கை

சில ரசிகர்கள் தோனியுடன் ஒப்பிட்டு கோலியை விமர்சனம் செய்வதை கண்டித்துள்ளனர். தோனி எடுத்த முடிவும், கோலி எடுத்த முடிவும் தனிநபர் சார்ந்தது அதை ஒப்பிடவோ, விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை என நெத்தியடியாக கூறி பதிலடி கொடுத்து வருகின்றனர்.

சில ரசிகர்கள் சோகம்

சில ரசிகர்கள் சோகம்

சில கோலி ரசிகர்கள், அவர் இல்லாமல் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி என்ன செய்யப் போகிறதோ என சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கோலிக்கு தங்களின் வாழ்த்துக்களையும் கூறி உள்ளனர். கோலி செய்ததில் எந்த தவறும் இல்லை என்றாலும் ரசிகர்கள் எல்லை மீறி விமர்சனம் செய்வதால் இந்த விவகாரம் பெரிதாக மாறி வருகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
India vs Australia : Fans comparing Kohli paternity leave with Dhoni’s 2015 world cup decision.
Story first published: Wednesday, November 11, 2020, 16:57 [IST]
Other articles published on Nov 11, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X