For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்திவாரத்தையே ஆட்டிட்டீங்களே.. தவான், ராயுடு, கோலியை காலி செய்த அனுபவமற்ற ஆஸி. பௌலர்கள்

சிட்னி : இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய டாப் ஆர்டரில் பேட்டிங் செய்யும் வீரர்கள் டக் அவுட் ஆகியும், சொற்ப ரன்களுக்கும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி பலவீனமாக இருப்பதால் இந்தியா எளிதாக வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்திய பந்துவீச்சு தடுமாற்றம்

இந்திய பந்துவீச்சு தடுமாற்றம்

இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 288 ரன்கள் குவித்தது. அந்த அணியில் கவாஜா, மார்ஷ், ஹேண்ட்ஸ்கோம்ப் அரைசதம் அடித்தனர். இந்திய அணி பந்துவீச்சில் விக்கெட் வீழ்த்த சற்று தடுமாறியது. எனினும், இந்தியா பேட்டிங்கில் கலக்கி விடும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர் ரசிகர்கள்.

டாப் ஆர்டர் திணறல்

டாப் ஆர்டர் திணறல்

அதற்கு நேர் மாறாக ஆஸ்திரேலிய அணியின் அனுவபற்ற பந்துவீச்சாளர்களான பெஹ்ரன்டாப் மற்றும் ரிச்சர்ட்சன் பந்துவீச்சுக்கே அனுபவ வீரர்களான தவான், கோலி திணறினர். அம்பதி ராயுடுவும் விரைவில் ஆட்டமிழந்தார்.

தவான் டக் அவுட்

தவான் டக் அவுட்

289 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணியில், தவான் தான் சந்தித்த முதல் பந்தில் பெஹ்ரன்டாப் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். அடுத்து கோலி அணியை மீட்பார் என எண்ணிய நிலையில் ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அம்பதி ராயுடு டக் அவுட்

அம்பதி ராயுடு டக் அவுட்

அடுத்து வந்த அம்பதி ராயுடு 2 பந்துகளில் ரிச்சர்ட்சன் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அணியை மீட்க தோனி ஐந்தாவது இடத்தில் களமிறங்கினார். ரோஹித் சர்மாவும், தோனியும் கூட ரன் சேர்க்க திணறினர்.

அறிமுக வீரர்

அறிமுக வீரர்

இந்திய அணியின் அனுபவ வீரர்களை திணற வைத்த இந்த இரண்டு பந்துவீச்சாளர்களும் சர்வதேச அனுபவமற்ற வீரர்கள் ஆவர். பெஹ்ரன்டாப்-க்கு இது தான் முதல் சர்வதேச ஒருநாள் போட்டி. தன் அறிமுக போட்டியிலேயே தவானை முதல் பந்தில் டக் அவுட் ஆக்கி சாதனை புரிந்துள்ளார்.

ரிச்சர்ட்சன் கலக்கல்

ரிச்சர்ட்சன் கலக்கல்

மற்றொரு பந்துவீச்சாளர் ரிச்சர்ட்சன் இதுவரை நான்கு சர்வதேச போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். இவர் கோலியை 3 ரன்களிலும், ராயுடுவை டக் அவுட் ஆக்கியும் அசத்தினார். ஆஸி. கேப்டன் பின்ச் கூறியது போலவே இந்திய அணியின் டாப் ஆர்டரை சரித்து விட்டனர் இந்த இளம் வீரர்கள்.

Story first published: Saturday, January 12, 2019, 13:28 [IST]
Other articles published on Jan 12, 2019
English summary
India vs Australia : India lost top order cheaply in First ODI. Dhawan and Rayudu gone for
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X