For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடேங்கப்பா!! 82 வருடத்துக்கு அப்புறம் இப்பதான் நடந்திருக்கு.. இந்திய கிரிக்கெட்டில் நடந்த அதிசயம்

மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட்டில் சுமார் 82 ஆண்டுகள் கழித்து ஒரே நேரத்தில் இரண்டு வீரர்கள் அணிக்கு புதிதாக துவக்கம் அளித்துள்ளனர்.

மாயன்க் அகர்வால் - ஹனுமா விஹாரி இருவருமே முதன்முறையாக இந்திய டெஸ்ட் அணிக்கு துவக்க வீரர்களாக களம் இறங்கினர்.

அதில் தான் இந்த அதிசய நிகழ்வு நடந்துள்ளது. மேலும், சில வித்தியசமான பழைய சாதனைகளும் நிகழ்ந்துள்ளது.

வாய்ப்பு கிடைத்தது எப்படி?

வாய்ப்பு கிடைத்தது எப்படி?

முதல் இரண்டு போட்டிகளில் முரளி விஜய் - ராகுல் சரியாக ஆடாத காரணத்தால், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆறாவது இடத்தில் களமிறங்கி வந்த ஹனுமா விஹாரி மற்றும் அறிமுக வீரர் மாயன்க் அகர்வால் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவருமே முதன் முறையாக இந்திய டெஸ்ட் அணிக்கு துவக்கம் அளிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

முதல் முறையாக இந்தியா தன் முதல் டெஸ்ட் போட்டியில் 1932 இல் ஆடிய போது இந்த நிகழ்வு நடந்தது. அடுத்து, 1936இல் இந்தியாவின் 5வது டெஸ்ட் போட்டி விஜய் மெர்ச்சன்ட் - தத்தாராம் ஹின்ட்லேகர் ஆகிய இருவரும் முதன் முறையாக இந்திய டெஸ்ட் அணிக்கு துவக்கம் அளித்தார்கள்.

82 ஆண்டுகளுக்கு பின்..

82 ஆண்டுகளுக்கு பின்..

அதன் பின் சுமார் 82 ஆண்டுகள் கழித்து 2018இல் ஹனுமா விஹாரி - மாயன்க் அகர்வால் என இரு வீரர்களுமே இந்திய அணிக்கு முதன் முறையாக ஒரே நேரத்தில் துவக்கம் அளித்துள்ளனர். இது ஒரு அதிசயமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

புதிய முயற்சி ஏன்?

புதிய முயற்சி ஏன்?

இதன் மூலம் இந்திய அணியில் ஒரு அனுபவ துவக்க வீரர் இருக்கும் போது தான் மற்றொரு புதிய வீரர் பயன்படுத்தப்பட்டுள்ளார் என தெரிகிறது. எனினும், இந்தியா தொடர்ந்து சரியான துவக்க வீரர்கள் இல்லாமலும், ப்ரித்வி ஷா காயத்தில் இருப்பதாலும் வேறு வழியின்றி இரு புதிய துவக்க வீரர்களை பயன்படுத்தியுள்ளது.

71 ஆண்டுகளுக்கு பின்..

71 ஆண்டுகளுக்கு பின்..

இது மட்டுமின்றி ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய துவக்க வீரர் ஒருவர் அறிமுகம் ஆவது சுமார் 71 ஆண்டுகள் கழித்து நடந்துள்ளது. டிசம்பர் 1947இல் அமீர் எலாஹி என்ற வீரர் ஆஸ்திரேலிய மண்ணில் துவக்க வீரராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் மாயன்க் அகர்வால் துவக்க வீரராக ஆஸ்திரேலியாவில் அறிமுகம் ஆகி உள்ளார்.

அறிமுக டெஸ்ட் சாதனை

அறிமுக டெஸ்ட் சாதனை

அதே போல, 71 ஆண்டுகள் சாதனை ஒன்றையும் மாயன்க் அகர்வால் முறியடித்துள்ளார். 1947இல் சிட்னி டெஸ்டில் இந்திய வீரர் டட்டு பாட்கர் தன் அறிமுக போட்டியில் 51 ரன்கள் அடித்து இருந்தார். ஆஸ்திரேலிய மண்ணில் தன் அறிமுக போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்தியர் என்ற பெருமையை 76 ரன்கள் அடித்த மாயன்க் அகர்வால் பெற்றுள்ளார்.

ஹனுமா விஹாரி ஏமாற்றம்

ஹனுமா விஹாரி ஏமாற்றம்

மாயன்க் அகர்வால் 76 ரன்கள் அடித்த நிலையில், ஹனுமா விஹாரி 8 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இவர்கள் துவக்க கூட்டணி 40 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா, கோலி களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

Story first published: Wednesday, December 26, 2018, 15:04 [IST]
Other articles published on Dec 26, 2018
English summary
India vs Australia : India recreate a 82 year old record in Australia by sending two new openers.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X