For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வேற வழியில்லை.. தவான் - ரோஹித் சர்மாவை பிரிக்க வேண்டிய நேரம் வந்துருச்சு?!

நாக்பூர் : இந்திய ஒருநாள் அணியில் கடந்த வருடம் வரை பிரச்சனை இல்லாமல் இருந்த ஒரே விஷயம் துவக்க வீரர்கள் தான்.

இந்திய அணிக்கு கடந்த 2013 முதல் நம்பிக்கை அளிக்கும் துவக்க வீரர்களாக விளங்கி வருகிறார்கள் ரோஹித் சர்மா - தவான் இணை.

சரிந்த கூட்டணி

சரிந்த கூட்டணி

2014ஆம் ஆண்டு தவிர இந்த இணை அனைத்து ஆண்டுகளிலும் 40+ ரன்களை சராசரியாக வைத்திருந்தனர். ஆனால், 2019ஆம் ஆண்டில் இதுவரை ஆடிய 10 போட்டிகளில் சராசரி 33 ஆக சரிந்துள்ளது. இந்த ஆண்டு இருவரும் இணையாக 10 போட்டிகளில் 330 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலிய தொடர்

ஆஸ்திரேலிய தொடர்

தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் தவான் டக் அவுட் ஆனார். இரண்டாம் போட்டியில் ரோஹித் சர்மா டக் அவுட் ஆனார். சரி இணையாக தான் ரன் குவிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் இந்த தொடரில் ரன் எடுத்திருப்பார்களா? என பார்த்தால் அதுவும் இல்லை.

நியூசிலாந்து தொடர்

நியூசிலாந்து தொடர்

முதல் போட்டியில் ரோஹித் நிதானமாக ஆடி 37 ரன்கள் எடுத்தார். இரண்டாம் போட்டியில் தவான் 21 ரன்களில் வெளியேறினார். கடைசியாக நடந்த நியூசிலாந்து தொடரில் ஐந்து போட்டிகளில் இருவரும் தலா இரு அரைசதங்கள் அடித்துள்ளனர். ஆனால், மற்ற மூன்று போட்டிகளில் மிக சொற்ப ரன்களே எடுத்தனர்.

தவான் பேட்டிங் எப்படி?

தவான் பேட்டிங் எப்படி?

தனிப்பட்ட முறையில் இந்த ஆண்டு தவான் 10 போட்டிகளில் 264 ரன்கள் எடுத்துள்ளார். 2 அரைசதங்கள் இதில் அடங்கும். இதன் சராசரி 29.33 ஆகும். மேலும், இவரது ஸ்ட்ரைக் ரேட் 78.80 என இருப்பதும் பின்னடைவாக அமைந்துள்ளது.

ரோஹித் பேட்டிங் எப்படி?

ரோஹித் பேட்டிங் எப்படி?

தவானுக்கு, ரோஹித் பரவாயில்லை என்ற நிலையில், இந்த ஆண்டு ரோஹித் 10 போட்டிகளில் 391 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம், 2 அரைசதம் அடங்கும், இதன் சராசரி 39.10 ஆகும். ரோஹித் சர்மா தனிப்பட்ட முறையில் சிறப்பாகவே பேட்டிங் செய்து வருகிறார். ஆனால், தவான் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

முன்பு துவக்கம் சூப்பர்

முன்பு துவக்கம் சூப்பர்

2019 உலகக்கோப்பைக்கான அணித் தேர்வு குறித்த கடந்த ஆண்டு பாதியில் இருந்து துவங்கியது. அப்போது இந்திய அணியில் துவக்க வீரர்கள் மற்றும் மூன்றாம் இடம் தவிர மற்ற அனைத்து இடங்களுக்கும் பேட்டிங் செய்ய சரியான வீரர்கள் இல்லாத நிலை இருந்தது.

கடைசி நேர அதிர்ச்சி

கடைசி நேர அதிர்ச்சி

தற்போது மற்ற இடங்களுக்கு சரியான வீரர்களை இந்தியா அடையாளம் கண்ட நிலையில், துவக்க வீரர்கள் தவான் - ரோஹித் சர்மா இணை சொதப்பத் துவங்கி இருப்பது அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

மாற்றம் இருக்குமா?

மாற்றம் இருக்குமா?

2019 உலகக்கோப்பை தொடர் வரும் மே மாதம் துவங்க உள்ள நிலையில், இந்தியாவிற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. தற்போது நடக்கும் ஆஸ்திரேலிய தொடர் தான் இந்தியா ஆடும் கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடர். இந்த தொடரில் இந்திய அணி தன் நிரந்தர துவக்க வீரர்களை மாற்ற முயலுமா? தவானை நீக்கி, ராகுலை இறக்குமா?

Story first published: Tuesday, March 5, 2019, 18:48 [IST]
Other articles published on Mar 5, 2019
English summary
India vs Australia : Indian opening partnership at its worst in 2019
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X