அடடே! தோல்வி அடைந்த இந்திய அணிக்கு நம்பிக்கை ஊட்டிய இர்ஃபான் பதான்!

இந்திய அணிக்கு நம்பிக்கை ஊட்டிய இர்ஃபான் பதான்!- வீடியோ

டெல்லி : இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-3 என இழந்தது.

உலகக்கோப்பைக்கு முன் நடைபெற்ற கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடரில் இந்தியா தோல்வி அடைந்ததால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. பலரும் இந்திய அணியின் பல முடிவுகளை விமர்சித்து வருகின்றனர்.

எல்லாம் சரியா தான் இருக்கு.. பதற்றமே இல்லை.. உலகக்கோப்பைக்கு தயாரா இருக்கோம்.. கோலி செம காமெடி!

இர்ஃபான் பதான் ஆறுதல்

இந்நிலையில், முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் இந்திய அணிக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். தன் பதிவில், "இந்த தோல்வி அணியின் நம்பிக்கையை பாதிக்காது என நினைக்கிறேன். உலகக்கோப்பை வரும் போது அணி தன் மிடில் ஆர்டர் இடங்களை சரி செய்து விடும். தொடரை வென்று சிறப்பாக ஆடினீர்கள் ஆஸ்திரேலியா!" என கூறியுள்ளார்.

ஒதுக்கப்பட்ட பதான்

ஒதுக்கப்பட்ட பதான்

இர்ஃபான் பதான் முன்பு இந்திய அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளராக விளங்கினார். எனினும், பின்னர் பல்வேறு காரணங்களால் அவருக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டது. அவர் தற்போது இந்திய அணியின் தோல்வியின் போது ஆதரவான குரலை எழுப்பி உள்ளார். அவர் கூறுவது போல இந்திய அணி உலகக்கோப்பைக்குள் சரியாகி விடுமா?

உலகக்கோப்பை தொடர்

உலகக்கோப்பை தொடர்

உலகக்கோப்பை தொடர் மே மாத இறுதியில் துவங்க உள்ளது. அதற்கு முன் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இந்த காலத்திற்குள் இந்திய அணி உலகக்கோப்பை அணியை தேர்வு செய்வதோடு, சமநிலை கொண்ட அணி எது என முடிவு செய்ய வேண்டும்.

பரிசோதனை

பரிசோதனை

தற்போது நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடர் முழுவதிலும், அதற்கு முன்பு நடைபெற்ற பல தொடர்களிலும், இந்திய அணி பரிசோதனை முயற்சிகளை அதிகமாக செய்து வந்தது. உலகக்கோப்பையில் பரிசோதனைகள் இல்லாமல் இருந்தாலே இந்திய அணி சிறப்பாக ஆடும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
India vs Australia : Irfan Pathan’s encouraging message to Team India
Story first published: Thursday, March 14, 2019, 15:38 [IST]
Other articles published on Mar 14, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X