For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்?

Recommended Video

சச்சின்,கபில் தேவ் வரிசையில் ஜடேஜா- வீடியோ

மெல்போர்ன் : இந்திய அணி மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெள்ளிக்கிழமை அன்று ஆட உள்ளது. இந்த போட்டியில் ஜடேஜா கபில் தேவ் மற்றும் சச்சினுடன் சாதனைப் பட்டியலில் சேர அதிக வாய்ப்புள்ளது.

இந்திய அளவில் குறிப்பிட்ட ரன்கள் மற்றும் விக்கெட்கள் எடுத்த ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் கபில் தேவ் மற்றும் சச்சின் மட்டுமே இருக்கின்றனர். 3வது போட்டியில் 10 ரன்கள் அடித்தால் ஜடேஜாவும் இந்த பட்டியலில் இணைவார்.

2000 ரன்கள், 150 விக்கெட்கள்

2000 ரன்கள், 150 விக்கெட்கள்

இந்திய அளவில் 2000 ரன்கள் மற்றும் 150 விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் இருவர் மட்டுமே. அது கபில் தேவ் மற்றும் சச்சின். கபில் தேவ் வேகப் பந்துவீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன் ஆவார். சச்சின் பேட்டிங்குடன் பகுதி நேர சுழற் பந்துவீச்சாளராகவும் இருந்தார். இந்த இரண்டு ஆல்-ரவுண்டர்கள் மட்டுமே இந்திய அளவில் இந்த பட்டியலில் உள்ளனர்.

ஜடேஜா நிலை

ஜடேஜா நிலை

ஜடேஜா பேட்டிங்கில் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை என்றாலும் சில சமயங்களில் அணிக்கு கை கொடுப்பார். அதன் மூலம் 146 ஒருநாள் போட்டிகளில் 1990 ரன்கள் எடுத்துள்ளார் ஜடேஜா. மேலும், 171 விக்கெட்களும் எடுத்துள்ளார்.

10 ரன்கள் தேவை

10 ரன்கள் தேவை

இன்னும் 10 ரன்கள் அடித்தால், 2000 ரன்கள் மற்றும் 150 விக்கெட்கள் எடுத்த இந்திய ஆல்-ரவுண்டர்கள் பட்டியலில் ஜாம்பவான்கள் கபில் தேவ் மற்றும் சச்சினுடன் இணைவார் ஜடேஜா. இதனால் மூன்றாவது போட்டியில் ஜடேஜாவுக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கபில் தேவ் - சச்சின் விக்கெட்கள்

கபில் தேவ் - சச்சின் விக்கெட்கள்

ஒருநாள் போட்டிகளில் கபில் தேவ் 3,783 ரன்களும், 253 விக்கெட்களும் எடுத்துள்ளார். சச்சின் 18,426 ரன்களும், 154 விக்கெட்களும் எடுத்துள்ளார். இவர்கள் இருவருக்கும் அடுத்து ஜடேஜா வரும் வரை எந்த ஆல்-ரவுண்டரும் இந்த குறிப்பிட்ட ரன்கள் மற்றும் விக்கெட்களை எட்டவில்லை என்பது இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் தட்டுப்பாடு இருந்ததையே காட்டுகிறது.

Story first published: Thursday, January 17, 2019, 19:09 [IST]
Other articles published on Jan 17, 2019
English summary
India vs Australia : Jadeja may join with Kapil Dev and Sachin in elite record list
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X