For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சந்தேகமே வேண்டாம்.. இந்தியாவின் மாபெரும் வீரர் இவர் தான்.. புகழ்ந்து தள்ளிய கில்லெஸ்பி.. கோலி இல்லை!

சிட்னி : இந்திய அணியில் தற்போது ஆடி வருபவர்களில் ஒரு வீரரை குறிப்பிட்டு அவர் இந்தியாவின் மாபெரும் வீரராக தன் கேரியரை முடிப்பார் என பாராட்டினார் ஜேசன் கில்லெஸ்பி.

அவர் பாராட்டிய அந்த வீரர் விராட் கோலியோ, ரோஹித் சர்மாவோ இல்லை.. வேகப் பந்துவீச்சாளர் பும்ரா.

அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலிய தொடரில் ஆட உள்ள நிலையில் பும்ரா குறித்தும், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சு குறித்தும் பேசி உள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கில்லெஸ்பி.

விராட் பேட்டிங்கை விரும்புவோம்... அதே நேரத்துல வெறுக்கவும் செய்வோம்... கலகல பெய்ன்விராட் பேட்டிங்கை விரும்புவோம்... அதே நேரத்துல வெறுக்கவும் செய்வோம்... கலகல பெய்ன்

இந்திய வேகப் பந்துவீச்சு

இந்திய வேகப் பந்துவீச்சு

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சு கடந்த இரு வருடங்களாகவே உலகையே அச்சுறுத்தி வருகிறது. 2019ஆம் ஆண்டு மிகவும் அச்சுறுத்தும் வேகப் பந்துவீச்சு கூட்டணியாக வலம் வந்தது பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா கூட்டணி.

அச்சுறுத்தும் பும்ரா

அச்சுறுத்தும் பும்ரா

அதிலும் பும்ரா டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டிகள் என அனைத்திலும் தன் வித்தியாசமான பந்துவீச்சு மற்றும் யார்க்கர்கள் மூலம் எதிரணிகளை அச்சுறுத்தி வருகிறார். 2020 ஐபிஎல் தொடரிலும் முதல் சில போட்டிகளில் சுமாராக ஆடிய அவர் அதன் பின் விக்கெட் வேட்டை நடத்தினார்.

கடந்த ஆஸ்திரேலிய தொடர்

கடந்த ஆஸ்திரேலிய தொடர்

2018-19 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி இருந்தது. அப்போது அதற்கு முக்கிய காரணமாக இருந்தது இந்திய ஆணையின் வேகப் பந்துவீச்சு தான். அப்போது பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் இணைந்து நான்கு போட்டிகளில் 70 விக்கெட்கள் வீழ்த்தினர்.

27 விக்கெட்

27 விக்கெட்

அப்போது ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் சேர்ந்து 60 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தி இருந்தனர். அந்த தொடரில் இந்திய அணியில் பும்ரா மட்டுமே 27 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போன்ற செயல்பாட்டை இந்த முறையும் அவர் வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கில்லெஸ்பி என்ன சொன்னார்?

கில்லெஸ்பி என்ன சொன்னார்?

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சு குறித்து ஜேசன் கில்லெஸ்பி கூறுகையில், அவர்கள் வேகப் பந்துவீச்சை வெவ்வேறு பாணியில் செய்கிறார்கள். இதுவரை இல்லாத அளவு இந்திய அணியின் வேகப் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது என்றார்.

மாபெரும் வீரர்

மாபெரும் வீரர்

பும்ராவின் கேரியர் முடியும் போது அவர் பெரிய சூப்பர்ஸ்டாராக இருப்பார். அவர் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவின் மாபெரும் வீரராக இருப்பார். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றார் கில்லெஸ்பி. மேலும், இந்திய அணியில் முன்பை விட நிறைய வேகப் பந்துவீச்சாளர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள் எனவும் கூறினார் அவர்.

Story first published: Sunday, November 15, 2020, 19:18 [IST]
Other articles published on Nov 15, 2020
English summary
India vs Australia : Jason Gillespie praises Bumrah as India’s greatest player
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X