For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடடே!! ஒரு வருஷமா பார்ம் இல்லாமல் தவித்த ராகுல்.. சில நாட்களில் மாற்றிக் காட்டிய ராகுல் டிராவிட்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் சமீபத்தில் தன் பேட்டிங் பார்மை மீட்ட கே எல் ராகுல் அதற்கு காரணம் யார் என்பது குறித்து பேசியுள்ளார்.

கே எல் ராகுல் கடந்த ஆண்டில் பேட்டிங் பார்ம் இன்றி தவித்து வந்தார். பல போட்டிகளில் வாய்ப்பு பெற்றும் தன் பேட்டிங்கை அவர் நிரூபிக்கவில்லை.

தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பையில் ஆடுவது கனவு தானா? எல்லாம் ரிஷப் பண்ட் கையில் தான் இருக்கு! தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பையில் ஆடுவது கனவு தானா? எல்லாம் ரிஷப் பண்ட் கையில் தான் இருக்கு!

தடங்கல்கள்

தடங்கல்கள்

இந்நிலையில், இந்த ஆண்டு துவக்கத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில் ஹர்திக் பண்டியாவுடன் சிக்கினார். அதனால் இடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர், ஒரு வழியாக அதில் இருந்து மீண்டு ஆஸ்திரேலிய தொடரில் இடம் பெற்றார்.

டி20 தொடரின் அதிரடி

டி20 தொடரின் அதிரடி

உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற ஆஸ்திரேலிய தொடர் தான் கடைசி வாய்ப்பு என்ற நிலையில், ராகுல் டி20 தொடரில் அதிரடியாக ஆடி இரண்டு போட்டிகளில் 50 மற்றும் 47 ரன்கள் அடித்து தன் பார்மை நிரூபித்தார்.

ராகுல் டிராவிட் உதவி

ராகுல் டிராவிட் உதவி

தான் மீண்டும் பேட்டிங் பார்மை மீட்டதற்கு முன்னாள் வீரரும், பேட்டிங் ஜாம்பவனுமான ராகுல் டிராவிட் தான் உதவி செய்தார் என ராகுல் தெரிவித்தார். இடை நீக்கத்தில் இருந்து மீண்ட ராகுல் இந்தியா ஏ அணிக்காக சில போட்டிகளில் ஆடினார். அப்போது தான் ராகுல் டிராவிட்டிடம் ஆலோசனை பெற்றுள்ளார். ஒரு வருடமாக பார்ம் இன்றி தவித்த ராகுல், சில போட்டிகளில் டிராவிட் ஆலோசனை பெற்று தன் இயல்பான ஆட்டத்தை மீட்டுக் கொண்டு வந்துள்ளார்.

டிராவிட் கூர் தீட்டிய வீரர்கள்

டிராவிட் கூர் தீட்டிய வீரர்கள்

ராகுல் டிராவிட் இந்தியா ஏ அணிக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார். ராகுல் மட்டுமின்றி, ப்ரித்வி ஷா, ஹனுமா விஹாரி, மாயங்க் அகர்வால், குல்தீப் யாதவ், சாஹல், விஜய் ஷங்கர் என பல இளம் வீரர்களை கூர் தீட்டி இந்திய அணிக்கு அளித்து வருகிறார்.

ஒருநாள் போட்டியில் ஆட வேண்டும்

ஒருநாள் போட்டியில் ஆட வேண்டும்

ராகுல் டி20 தொடரின் இரண்டு போட்டிகளில் நன்றாக ஆடி விட்டார். எனினும், உலகக்கோப்பை அணியில் இடம் பெறும் முன் அவர் ஒருநாள் போட்டி சூழ்நிலையிலும் தன் பேட்டிங்கை நிரூபித்துக் காட்ட வேண்டும்.

ஆஸி ஒருநாள் தொடர்

ஆஸி ஒருநாள் தொடர்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை முதல் நடைபெற உள்ளது. அந்த தொடரில் ராகுலுக்கு வாய்ப்பு அளித்து அவரது பேட்டிங் பார்ம் ஒருநாள் போட்டிகளில் எப்படி இருக்கிறது என அணி நிர்வாகம் சோதிக்க வேண்டும்.

Story first published: Friday, March 1, 2019, 15:38 [IST]
Other articles published on Mar 1, 2019
English summary
India vs Australia : K L Rahul says Rahul Dravid helped him in his batting form
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X