அந்த இளம் தமிழக வீரர் தான் என் ஹீரோ.. வாவ்.. யார்க்கர் மன்னனை புகழ்ந்து தள்ளிய கபில் தேவ்!

மும்பை : இந்திய அணியில் சமீபத்தில் இடம் பெற்ற தமிழக வீரர் டி நடராஜனை புகழ்ந்து தள்ளி இருக்கிறார் ஜாம்பவான் கபில் தேவ்.

இது சற்றும் எதிர்பாராத பாராட்டாக அமைந்தது. அதிலும் கபில் தேவ் "நடராஜன் தான் என் ஹீரோ" எனக் கூறியது மிகப் பெரும் பாராட்டாக கருதப்படுகிறது.

மேலும், நடராஜனின் தனிச் சிறப்பான யார்க்கர் பந்துவீச்சையும் கபில் தேவ் பாராட்டினார்.

நடராஜன்

நடராஜன்

சேலத்தை சேர்ந்த தமிழக வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் 2017ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். ஆனால், அவரால் அப்போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதன் பின் இரண்டு ஆண்டுகள் ஹைதராபாத் அணியில் இடம் பெற்ற அவர், அந்த அணிக்காக 2020 ஐபிஎல் தொடரில் போட்டிகளில் ஆடினார்.

யார்க்கர் மன்னன்

யார்க்கர் மன்னன்

யார்க்கர் பந்துகளை வீசுவதில் சிறந்து விளங்கும் நடராஜன் அதை வைத்தே எதிரணி பேட்ஸ்மேன்களை மிரள வைத்தார். ஒரு கட்டத்தில் ஹைதராபாத் அணியில் புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில், நடராஜன் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளராக மாறினார்.

ஏபி டிவில்லியர்ஸ் விக்கெட்

ஏபி டிவில்லியர்ஸ் விக்கெட்

பெங்களூர் அணிக்கு எதிரான பிளே-ஆஃப் போட்டியில் ஏபி டிவில்லியர்ஸ் விக்கெட்டை தன் துல்லிய யார்க்கர் மூலம் வீழ்த்தினார் நடராஜன். அதுவே இந்த சீசனின் சிறந்த விக்கெட் என பலரும் கூறி வருகின்றனர். அப்படி ஒரு பாராட்டைப் பெற்ற அவர் அடுத்த பிளே-ஆஃப் போட்டியில் மற்றுமொரு வியப்பை ஏற்படுத்தினார். .

யார்க்கர் ஓவர்

யார்க்கர் ஓவர்

டெல்லி அணிக்கு எதிரான பிளே-ஆஃப் போட்டியில் கடைசி ஓவரில் ரன் கொடுக்கக் கூடாது என்ற நிலையில் நடராஜன் ஆறு யார்க்கர் பந்துகளை வீசி அதிர வைத்தார். ஒரு ஓவரின் ஆறு பந்துகளையும் துல்லியமாக யார்க்கராக வீசுவது கடினம் என்றா நிலையில் அதை சாதித்துக் காட்டினார்.

என்ன சொன்னார் கபில் தேவ்?

என்ன சொன்னார் கபில் தேவ்?

2020 ஐபிஎல் தொடரில் வேகப் பந்துவீச்சாளர்கள் செயல்பாடு பற்றி பேசிய கபில் தேவ் தற்போதைய வேகப் பந்துவீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்யத் தெரியாமல் இருப்பதை சுட்டிக் காட்டி அவர்களை சாடினார். அதே சமயம், யார்க்கராக வீசித் தள்ளிய நடராஜனை பாராட்டினார்.

மகிழ்ச்சி இல்லை

மகிழ்ச்சி இல்லை

தற்போது உள்ள வேகப் பந்துவீச்சாளர்களை கண்டு எனக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை. முதல் பந்தை கிராஸ் ஸீமில் வீசக் கூடாது. ஸ்விங் பந்து வீசத் தெரியாமல் வேகமாக பந்து வீசுவதிலும், மற்ற டெக்னிக்குகளை கற்றுக் கொள்வதிலும் எந்தப் பயனும் இல்லை என்றார்.

கபில் தேவ் பாராட்டு

கபில் தேவ் பாராட்டு

இந்த ஐபிஎல் தொடரில் நடராஜன் தான் என் ஹீரோ. அந்த சின்னப் பையன் பயமின்றி பந்து வீசினார். நிறைய யார்க்கர் பந்துகளை வீசினார். அதனால் தான் நான் சொல்கிறேன், இன்று, நாளை மட்டுமல்ல, இன்னும் 100 வருடங்கள் ஆனாலும் யார்க்கர் தான் சிறந்த பந்து என்றார் கபில் தேவ்.

தனி மதிப்பு

தனி மதிப்பு

கபில் தேவ் போன்ற ஒரு ஜாம்பவான் வேகப் பந்துவீச்சாளர் நடராஜனை தன் ஹீரோ என கூறி உள்ள நிலையில், அவருக்கு தனி மதிப்பு கிடைத்துள்ளது. இந்திய டி20 அணியில் இடம் பெற்றுள்ள நடராஜன் ஒரு சர்வதேச போட்டியில் சிறப்பாக பந்து வீசினாலும் அணியில் நீண்ட காலம் வாய்ப்பு கிடைக்கக் கூடும்.

நடராஜன் நிலை

நடராஜன் நிலை

தற்போது ஆஸ்திரேலிய டி20 தொடருக்கான அணியில் இடம் பெற்றுள்ள நடராஜனுக்கு போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்குமா? என்பதே கேள்விக் குறியாக உள்ளது. கிடைக்கும் சிறிய வாய்ப்பில் அவர் தன்னை நிரூபிக்கவேண்டிய கட்டாயமும் உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
India vs Australia : Kapil Dev says Natarajan was his Hero in IPL 2020
Story first published: Saturday, November 21, 2020, 11:52 [IST]
Other articles published on Nov 21, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X