For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடடே! ராகுல் ரொம்ப நல்ல பையன்!! அம்பயரிடம் பாராட்டு வாங்கிய ராகுல்.. என்ன செய்தார் தெரியுமா?

சிட்னி : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ராகுல் செய்த செயலுக்கு அம்பயர் பாராட்டு தெரிவித்தார்.

இந்தியா தன் முதல் இன்னிங்க்ஸ்-ஐ 622 ரன்கள் அடித்து டிக்ளர் செய்தது. அடுத்து ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது. அந்த சமயத்தில் பீல்டிங் செய்த ராகுல், நேர்மையாக நடந்து கொண்டதற்காக அம்பயர் பாராட்டினார். அப்படி என்ன செய்தார் ராகுல்?

ஹாரிஸ் தூக்கி அடித்தார்

ஹாரிஸ் தூக்கி அடித்தார்

ஆஸ்திரேலிய துவக்க வீரர்கள் மார்கஸ் ஹாரிஸ் - கவாஜா விக்கெட் இழக்காமல் ஆடி வந்தனர். 15வது ஓவரில் ஜடேஜா பந்து வீச வந்தார். அவர் வீசிய முதல் பந்தை மார்கஸ் ஹாரிஸ் தூக்கி அடித்தார்.

டைவ் அடித்தார் ராகுல்

டைவ் அடித்தார் ராகுல்

அது அம்பயரை தாண்டி மிட்-ஆன் திசையில் சென்றது. ராகுல் அதை கேட்ச் பிடிக்க டைவ் அடித்தார். மேலோட்டமாக பார்த்த போது ராகுல் கேட்ச் பிடித்ததை போன்றே இருந்தது. ஜடேஜா விக்கெட் விழுந்த குஷியில் ராகுலை பார்த்து ஓடி வந்தார்.

கேட்ச் இல்லை என சைகை

கேட்ச் இல்லை என சைகை

ராகுல் இது கேட்ச் இல்லை என கைகளால் சைகை செய்தார். ராகுல் டைவ் அடித்தாலும், அவரால் கேட்சை பிடிக்க முடியவில்லை. பந்து லேசாக தரையில் பட்ட பின்னரே ராகுல் கேட்ச் பிடித்தார்.

பும்ரா பாராட்டு

பும்ரா பாராட்டு

சக வீரர் பும்ரா ஓடி வந்து ராகுலின் நேர்மையையும், அவரது முயற்சியையும் பாராட்டினார். அம்பயர் இயான் குல்ட் ராகுலை பாராட்டி சைகை செய்தார். கட்டை விரலை உயர்த்திக் காட்டிய அம்பயர் "ராகுல்! நல்ல வேலை செய்தீர்கள்" என கூறினார்.

தடுமாறும் அம்பயர்கள்

தடுமாறும் அம்பயர்கள்

சமீப காலமாக அம்பயர்களின் முடிவுகள் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. பல முறை நோ-பால்கள் கவனிக்காமல் விட்டது, பல கேட்ச் முடிவுகள் தவறாக சென்றது என அம்பயர்கள் தொழில்நுட்பம் இருந்தும் தடுமாறி வருகிறார்கள். இந்த நிலையில், ராகுல் நேரடியாகவே கேட்ச் இல்லை எனக் கூறி அம்பயர்களின் வேலையை எளிதாக்கினார்.

நேர்மைக்காக பாராட்டு

நேர்மைக்காக பாராட்டு

ராகுல் பேட்டிங்கில் சொதப்பி இருந்தாலும் நேர்மைக்காக பாராட்டு வாங்கினார். இந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலேயே பல சர்ச்சைக்குரிய விக்கெட் முடிவுகள் அம்பயர்களால் எடுக்கப்பட்டது. ராகுல் கூட இது சரியான கேட்ச் தானா என தெரியவில்லை என கூறி இருக்கலாம். ஆனால், நேரடியாக இல்லை என ஒப்புக்கொண்டார்.

இந்தியா ஆதிக்கம்

இந்தியா ஆதிக்கம்

இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 622 ரன்கள் அடித்த நிலையில், ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்க்ஸில் தடுமாறி வருகிறது. 200 ரன்களை எட்டுவதற்குள் 6 விக்கெட்களை இழந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு இந்த போட்டியில் வெற்றி வாய்ப்பு மிக மிக குறைவே.

Story first published: Saturday, January 5, 2019, 11:16 [IST]
Other articles published on Jan 5, 2019
English summary
India vs Australia : KL Rahul denied the catch and said it was dropped. The Umpire Ian Gould appreciate his sportsmanship.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X