For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

6 பந்தில் அவுட்டான ராகுல்.. அடிச்ச 9 ரன்னும் எட்ஜ் ஆகி வந்தது.. உச்சகட்ட கடுப்பில் ரசிகர்கள்

சிட்னி : இந்திய அணியில் துவக்க வீரர் ராகுல் மீண்டும் ஒரு முறை மோசமான முறையில் ஆட்டமிழந்து உள்ளார்.

அவரை சிட்னி டெஸ்டில் சேர்த்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் ரசிகர்கள். இந்த நிலையில், இந்த போட்டியிலும் அவர் தன் மோசமான பேட்டிங்கை தொடர்ந்துள்ளது கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.

இக்கட்டான சூழலில் ஆஸி.

இக்கட்டான சூழலில் ஆஸி.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை குறைந்த பட்சம் சமன் செய்யம் முடியும் என்ற இக்கட்டான சூழலில் ஆஸ்திரேலியா உள்ளது.

மீண்டும் வாய்ப்பு

மீண்டும் வாய்ப்பு

இந்தியா டிரா அல்லது வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வென்று சாதனை புரிய முடியும் என்ற சூழலில் உள்ளது. இந்த நிலையில், இந்திய அணியில் ராகுல் துவக்க வீரராக மீண்டும் வாய்ப்பு பெற்றார்.

வெறும் 6 பந்துகள்

வெறும் 6 பந்துகள்

கடந்த ஆண்டு முழுவதும் டெஸ்ட் போட்டிகளில் சொதப்பியவர் இந்த போட்டியிலாவது பார்முக்கு திரும்புவாரா என எதிர்பார்த்தால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ராகுல் இந்த போட்டியில் வெறும் 6 பந்துகள் மட்டுமே சந்தித்து நடையைக் கட்டினார்.

இரண்டாவது ஓவரிலேயே அவுட்

இரண்டாவது ஓவரிலேயே அவுட்

இந்த போட்டியில் மாயன்க் அகர்வாலுடன் துவக்கம் அளித்த ராகுல் 9 ரன்கள் மட்டுமே அடித்து இரண்டாவது ஓவரிலேயே நடையைக் கட்டினார். அந்த 9 ரன்களில் இரண்டு பவுண்டரிகள் அடங்கும். அந்த இரண்டும் கூட எட்ஜ் ஆகி வந்தது.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

பல வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் ரன் குவித்தும் அணியில் வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நிலையில், இந்த பார்ம் இல்லாத வீரருக்கு ஏன் இத்தனை வாய்ப்பு என ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். பலர் ராகுலை கலாய்த்து ட்வீட் போட்டு வருகின்றனர்.

அஞ்சு நிமிஷம் லேட்

நான் ஒரு அஞ்சு நிமிஷம் லேட்டா எழுந்துட்டேன். அந்த ஜாம்பவான் பேட்டிங் பண்றதை பார்க்காம போயிட்டேன் என நக்கலடித்துள்ளார்.

இரண்டு ஃபோர்கள்

ராகுல் அடித்த 9 ரன்களில் இரண்டு ஃபோர்கள் அடங்கும். அந்த இரண்டும் கூட எட்ஜ் ஆகி வந்தது தான் என குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டம்

அவர் ஏன் இன்னும் அணியில் இருக்கிறார்? அணிக்கு என்ன தான் செய்கிறார்? பிசிசிஐயை தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு கீழ் கொண்டு வந்து அவரை ஏன் தேசிய அணியில் எடுக்கிறார்கள் என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

வருஷம் மாறிடுச்சு

வருஷம் மாறிடுச்சு.. ஆனா ராகுல் அப்படியே தான் இருக்கார்..

ராகுலை விட சிறந்த ஓபனர்

ராகுலை விட சிறந்த ஓபனர் என சோடா மூடி திறக்கும் ஓபனர் தான்.

ஆக்சிடென்டல் கிரிக்கெட்டர்

ஆக்சிடென்டல் கிரிக்கெட்டர் என ராகுலை, மன்மோகன் சிங் பற்றிய பாலிவுட் படம் ஒன்றின் பெயரை மாற்றி கலாய்த்துள்ளார்.

Story first published: Thursday, January 3, 2019, 12:30 [IST]
Other articles published on Jan 3, 2019
English summary
India vs Australia : KL Rahul failed again in the fourth test match and got trolled by Indian fans.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X