For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின், லாரா, பாண்டிங்கை ஓரங்கட்டிய கோலி.. புது வருடத்தின் முதல் போட்டியிலேயே சாதனை

சிட்னி : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி கடந்த 2018ஆம் ஆண்டில் எராளமான சாதனைகளை நொறுக்கித் தள்ளினார்.

அதே போல 2019ஆம் ஆண்டையும் சாதனையுடன் துவக்கி உள்ளார். சிட்னி டெஸ்டில் 19,000 சர்வதேச ரன்களை கடந்தார் கோலி. இதில் சச்சின், லாரா உள்ளிட்ட ஜாம்பவான்களையும் முந்தியுள்ளார்.

19,000 ரன்களை கடந்தார்

19,000 ரன்களை கடந்தார்

கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எனினும், அவர் சர்வதேச போட்டிகளில் ஒட்டு மொத்தமாக 19,000 ரன்களை கடந்து அசத்தினார்.

முக்கிய மைல்கல்

முக்கிய மைல்கல்

இதன் மூலம் புத்தாண்டின் முதல் போட்டியிலேயே ஒரு முக்கிய மைல்கல்லை எட்டினார். 19,000 சர்வதேச ரன்கள் என்ற மைல்கல்லை எட்ட 399 இன்னிங்க்ஸ்கள் எடுத்துக் கொண்டுள்ளார் கோலி.

சச்சினை முந்தினார்

சச்சினை முந்தினார்

அதே சமயம், சச்சின் 432 இன்னிங்க்ஸ்களில் 19,000 ரன்களை எட்டினார். இதற்கு முன் சச்சின் தான் வேகமாக 19,000 சர்வதேச ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். தற்போது கோலி அவரை முந்தியுள்ளார்.

5 வீரர்கள் பட்டியல்

5 வீரர்கள் பட்டியல்

வேகமாக 19,000 சர்வதேச ரன்களை கடந்தவர்கள் பட்டியலில் தற்போது முதல் ஐந்து இடங்களில் இருப்பவர்கள் - கோலி (399 இன்னிங்க்ஸ்), சச்சின் (432 இன்னிங்க்ஸ்), பிரையன் லாரா (433 இன்னிங்க்ஸ்), ரிக்கி பாண்டிங் (444 இன்னிங்க்ஸ்), ஜாக்கஸ் காலிஸ் (458 இன்னிங்க்ஸ்).

முதல் தொடர் வெற்றி

முதல் தொடர் வெற்றி

இந்தியா சிட்னி டெஸ்டில் வெற்றி அல்லது டிரா செய்தால், ஆஸ்திரேலிய மண்ணில் முதன் முறையாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை தனதாக்கிக் கொள்வார் கோலி.

Story first published: Thursday, January 3, 2019, 18:38 [IST]
Other articles published on Jan 3, 2019
English summary
India vs Australia : Kohli broke Sachin record of 19000 runs, after he achieved it in 399 innings.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X