For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவங்க தைரியமா ஆடினாங்க.. ஜெயிச்சாங்க.. ஆஸி.வை பாராட்டிய கோலி.. அப்ப இந்தியா தைரியமா ஆடலைனு சொல்றாரா?

டெல்லி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த தோல்வியால், ஒருநாள் தொடரையும் இந்தியா 2-3 என இழந்தது. இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் கோலி, ஆஸ்திரேலிய அணி தைரியமாக ஆடியது என கூறியுள்ளார்.

அழுத்தம்

அழுத்தம்

ஐந்தாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 272 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணி தவான், கோலி போன்ற முக்கிய பேட்ஸ்மேன்களை துவக்கத்திலேயே இழந்து அழுத்தத்தில் ஆழ்ந்தது.

தடுமாறினர்

தடுமாறினர்

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர். விக்கெட் வீழ்ச்சி ஒருபுறம், ஏறிக் கொண்டே சென்ற ரன் விகிதம் ஒருபுறம் என இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறினர்.

ஜாதவ் - புவி

ஜாதவ் - புவி

கேதார் ஜாதவ் மற்றும் புவனேஸ்வர் குமார் கடைசி நேரத்தில் 91 ரன்களுக்கு கூட்டணி அமைத்து ஆடினர். அவர்கள் தவிர இந்திய பேட்ஸ்மேன்களால் ஆஸ்திரேலிய அணி கொடுத்த அழுத்தத்தை எதிர்கொள்ள முடியவில்லை.

தைரியத்துடன் ஆடினர்

தைரியத்துடன் ஆடினர்

இந்திய அணியின் தோல்விக்கு பின் பேசிய கேப்டன் கோலி, "ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு தகுதி உடையது. அவர்கள் ஆர்வத்துடனும், வெற்றிக்கான பசியுடனும், மனதுடனும் ஆடினார்கள். அழுத்தமான நேரங்களில் தைரியத்துடன் செயல்பட்டனர். அதனால், அவர்கள் வெற்றி பெற தகுதி உடையவர்கள்" என குறிப்பிட்டார்.

தைரியமற்ற இந்திய வீரர்கள்

தைரியமற்ற இந்திய வீரர்கள்

உண்மையில் இந்திய அணி தைரியத்துடன் ஆடவில்லை என்பதை தான் கோலி இப்படி கூறியுள்ளார். அதைத் தவிர இந்திய அணியில் யாரும் அழுத்தத்தை எதிர்கொண்டு ஆடவில்லை. அதே நேரம், ஆஸ்திரேலிய அணி நான்காவது போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 359 ரன்கள் இலக்கை நோக்கி எந்தவித பதற்றமும் இன்றி ஆடி, வெற்றி பெற்றது. ஐந்தாவது போட்டியிலும் பந்துவீச்சில் கடைசி வரை நிதானம் இழக்காமல் இருந்தனர்.

Story first published: Thursday, March 14, 2019, 10:16 [IST]
Other articles published on Mar 14, 2019
English summary
India vs Australia : Kohli says Australia were brave in pressure situations
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X