For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓய்வுன்னா ஓய்வு தான்.. அதுக்கப்புறம் நான் அந்த “சீன்”லயே இருக்க மாட்டேன்.. கோலியின் அதிரடி முடிவு

சிட்னி : கேப்டன் கோலி தன் ஓய்வு திட்டம் என்ன என்பது பற்றி பேசியுள்ளார். அது யாரும் எதிர்பாராத ஒன்றாக இருக்கிறது.

குறிப்பாக, இன்று பல ஓய்வு பெற்ற முன்னணி வீரர்கள் டி20 தொடரில் ஆடி வருகிறார்கள். அது போல நீங்களும் பிக் பாஷ் தொடரில் ஆடுவீர்களா? என கேட்ட போது தான் கோலி தான் ஓய்வுக்கு பின் என்ன செய்வேன் என கூறினார்.

ஓய்வுக்கு பின்

ஓய்வுக்கு பின்

கோலி கூறுகையில் தான் கிரிக்கெட் ஆடியது போதும் என நினைத்த பின்னரே ஓய்வு பெறுவேன். அதனால், ஓய்வுக்கு பின் மீண்டும் நான் பேட்டை எடுக்கவே மாட்டேன் என கூறினார்.

நிறைய கிரிக்கெட் ஆடியாச்சு

நிறைய கிரிக்கெட் ஆடியாச்சு

கோலி கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறைய கிரிக்கெட் ஆடி விட்டார். அதிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக அதிக சர்வதேச ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்று விட்டார்.

சீனிலேயே இருக்க மாட்டேன்

அப்படி இருந்தும் அலுப்பில்லாமல் கிரிக்கெட் ஆடும் கோலி, தான் போதும் என்று நினைத்த பின்னரே கிரிக்கெட்டை விடுவேன் என கூறினார். "நான் கிரிக்கெட் ஆடி முடித்து விட்டால் முடித்து விட்டது தான். அதன் பின் நான் அந்த "சீனிலேயே" இருக்க மாட்டேன்" என கூறினார்.

காரணம் சரி தான்

காரணம் சரி தான்

முன்னணி பேட்ஸ்மேன் கோலி ஓய்வுக்கு பின் தான் பேட்டை தொட மாட்டேன் என கூறியுள்ளது வித்தியாசமாக இருந்தாலும், அவர் சொல்லும் காரணம் சரியானதாகவே உள்ளது. ஓய்வு என்பது கிரிக்கெட் ஆடியது போதும் என்ற நிலையே.

பணம் தான் காரணமா?

பணம் தான் காரணமா?

இன்றைய காலகட்டத்தில் சில வீரர்கள் டி20 போட்டிகள் எளிதாக இருப்பதால், தேசிய அணிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டு எளிதான டி20 தொடர்களில் பங்கேற்று கல்லா கட்டி வருகின்றனர். ஆனால், கோலி ஏற்கனவே "கல்லா" கட்டி விட்டதால் அந்த அவசியம் அவருக்கு இல்லை.

Story first published: Friday, January 11, 2019, 18:59 [IST]
Other articles published on Jan 11, 2019
English summary
India vs Australia : Kohli says he won’t take bat again after retirement
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X