அந்த பார்வை.. விலகல்.. பெரும் அவமானம்.. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை!

மும்பை : இந்திய அணியில் தன்னை தேர்வு செய்யவில்லை என்ற ஆதங்கத்தில் சூர்யகுமார் யாதவ் ஆடிய ஆட்டமும், அந்தப் போட்டியில் நடந்த ஒரு சம்பவமும் மறக்க முடியாததாக மாறி உள்ளது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி கேப்டனை களத்திலேயே வைத்து தன் திறமை மூலமும், பார்வை மூலம் பதிலடி கொடுத்த ஒரே வீரர் சூர்யகுமார் யாதவ் மட்டுமே.

விராட் கோலியும் முதிர்ச்சி இன்றி நடந்து கொண்டு விமர்சனத்தை சந்தித்துள்ளார்.

3 ஆண்டுகள்

3 ஆண்டுகள்

சூர்யகுமார் யாதவ் கடந்த சில ஆண்டுகளாக சிறந்த பார்மில் இருக்கிறார். இளம் வீரராக மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியில் நுழைந்த அவர் அந்த அணியில் சர்வதேச வீரர்களுக்கு இணையாக ஆடி வருகிறார். உள்ளூர் போட்டிகளிலும் தன் முத்திரையை பதித்துள்ளார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

அவர் இந்திய அணியில் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு மூன்று ஆண்டுகளாக நிலவி வருகிறது. ஆனால், பல்வேறு காரணங்களால் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது அவருக்கு 30 வயது ஆகிறது. இப்போது வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் எப்போதும் கிடைக்காது. வயதை காட்டி புறக்கணிக்கப்படுவார் என்ற நிலை இருந்தது.

அணியில் இடமில்லை

அணியில் இடமில்லை

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ஆட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அதில் சூர்யகுமார் யாதவ் பெயர் இடம் பெறவில்லை. அது பெரும் ஏமாற்றமாக இருந்தது. அவர் தனிப்பட்ட முறையில் இதை பெரிய ஏமாற்றமாக எடுத்துக் கொண்டார்.

பெங்களூர் அணி போட்டி

பெங்களூர் அணி போட்டி

இந்திய அணி அறிவித்த பின் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சந்தித்தது. இதன் மூலம், சூர்யகுமார் யாதவ், விராட் கோலியை களத்தில் எதிர்த்து ஆடும் நிலை ஏற்பட்டது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பெறும் என்பதால் போட்டிக்கு எதிர்பார்ப்பு இருந்தது.

ரோஹித் சர்மாவும் இல்லை

ரோஹித் சர்மாவும் இல்லை

இந்திய அணியில் ரோஹித் சர்மா பெயரும் இடம் பெறவில்லை. சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா நீக்கத்திற்கு விராட் கோலி தான் காரணம் என ரசிகர்கள் மத்தியில் பேச்சு எழுந்த நிலையில், பெங்களூர் அணிக்கு எதிரான போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா காயம் காரணமாக இடம் பெறவில்லை.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 165 ரன்களை சேஸிங் செய்தது. மும்பை அணியின் மற்ற வீரர்கள் விக்கெட்களை இழந்து வந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் நிலையாக நின்று ஆடி ரன் குவித்தார். அவரை அவுட் ஆக்க ம,முடியாமல் கேப்டன் விராட் கோலி தவித்தார்.

கோலி செய்த காரியம்

கோலி செய்த காரியம்

ஒரு கட்டத்தில் சூர்யகுமார் அடித்த பந்தை பீல்டிங் செய்து எடுத்த கோலி அவரை நோக்கி ஏதோ கூறினார். பின் அவர் அருகே வந்தார். இது தேவையில்லாத சீண்டலாக இருந்தது. நன்றாக ஆடும் வீரரை சீண்டி ஆட்டமிழக்க வைக்கும் கோலியின் உத்தி தான் இது.

அந்த பார்வை மற்றும் விலகல்

அந்த பார்வை மற்றும் விலகல்

கோலியின் அந்த முதிர்ச்சி அற்ற செய்கைக்கு, சூர்யகுமார் சரியான பதிலடி கொடுத்தார். கோலி தன் அருகே வரும் வரை அவரை முறைத்துப் பார்த்தபடி நின்றார். அசையக் கூட இல்லை. கோலி அவர் அருகே வந்து போது, அந்த இடத்தை விட்டு அகன்றார்.

மறக்க முடியாத சம்பவம்

மறக்க முடியாத சம்பவம்

சூர்யகுமாரின் இந்த செயல் விராட் கோலியின் முதிர்ச்சியற்ற செயலுக்கு சரியான பதிலடி. ஒரு இந்திய அணி கேப்டனை உள்ளூர் வீரர் அவமானப்படுத்தி விட்டார் என ரசிகர்கள் கூறத் துவங்கினர். வாய்ப்பு கிடைக்காத கோபத்தில் இருக்கும் ஒரு வீரர் கேப்டனை நோக்கி முறைத்துப் பார்த்த சம்பவம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் முதல்முறை!!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
India vs Australia : Only Suryakumar Yadav opposed captain face to face for not selecting
Story first published: Thursday, October 29, 2020, 19:10 [IST]
Other articles published on Oct 29, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X