For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடடே!! சச்சின், பிராட்மேன், காலிஸ் உடன் இணைந்த புஜாரா.. ஆனா சந்தோசப் பட முடியாது

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் புஜாரா முதல் இன்னிங்க்ஸில் சதம் அடித்தார்.

ஆனால், இரண்டாம் இன்னிங்க்ஸில் சொதப்பினார். இதன் மூலம் தலைசிறந்த பேட்ஸ்மேன்களின் மோசமான சாதனைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் புஜாரா.

சூப்பர் புஜாரா

சூப்பர் புஜாரா

மெல்போர்னில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்டில் புஜாரா முதல் இன்னிங்க்ஸில் 106 ரன்கள் அடித்தார். இந்தியா 443 ரன்கள் எடுத்ததில் இவரது பங்கு அதிகம். மற்ற வீரர்கள் யாரும் இந்த போட்டியில் சதம் அடிக்கவில்லை.

புஜாரா டக் அவுட் ஆனார்

புஜாரா டக் அவுட் ஆனார்

இரண்டாம் இன்னிங்க்ஸில் புஜாரா டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். கோலியும் அடுத்து டக் அவுட் ஆனார். இருவரையும் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் ஆட்டமிழக்கச் செய்தார். புஜாரா இரண்டாவது முறையாக ஒரே டெஸ்டில் ஒரு சதம் மற்றும் டக் அவுட் ஆகியுள்ளார்.

இரு முறை சதம் - டக் அவுட்

இரு முறை சதம் - டக் அவுட்

இதற்கு முன்னர் புஜாரா 2015இல் இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் 145 ரன்கள் அடித்தும் மற்றும் டக் அவுட் ஆகியும் இருந்தார். இது போல இருமுறை சதம் மற்றும் டக் அவுட் ஆன பேட்ஸ்மேன்களுக்கென ஒரு சாதனைப் பட்டியல் உள்ளது. அதில் இடம் பெற்றுள்ள வீரர்கள் யார் என்பது சுவாரஸ்யமான விஷயமாக உள்ளது.

சச்சினும் உண்டு

சச்சினும் உண்டு

சச்சின், டான் பிராட்மேன், விவியன் ரிச்சர்ட்ஸ், சர் கார்பீல்ட் சோபர்ஸ், டேரில் குல்லினான், ஜேக்கஸ் காலிஸ் ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் பலர் பேட்டிங் ஜாம்பவான்கள். இந்தியாவின் சச்சின் 1999இல் பாகிஸ்தான் மற்றும் 2002இல் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக ஒரு சதம், ஒரு டக் அவுட் ஆகியுள்ளார்.

3 போட்டிகளில் சந்தர்பால்

3 போட்டிகளில் சந்தர்பால்

இருமுறை இப்படி நடப்பது சரி. அதற்கும் மேல் 3 போட்டிகளில் யாராவது சதம் மற்றும் டக் அவுட் ஆனதுண்டா? உண்டு. வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷிவ்நரேன் சந்தர்பால். அவர் மூன்று முறை சதம் மற்றும் டக் அவுட் ஆகியுள்ளார். அதுவே அதிகபட்சம் ஆகும்.

Story first published: Saturday, December 29, 2018, 13:27 [IST]
Other articles published on Dec 29, 2018
English summary
India vs Australia : Pujara enters this worst record list along with other legends
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X