For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன ஒரு பாசம்!! உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்!!

அடிலெய்டு : இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், தோனியை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ரிஷப் பண்ட் அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச்கள் பிடித்து உலக சாதனையை சமன் செய்தார்.

தோனியிடம் இருந்து நிறைய விஷயங்களை தான் கற்றுக் கொள்வதாக கூறியுள்ளார் ரிஷப் பண்ட். மேலும், தோனியை புகழ்ந்து தள்ளியுள்ளார் இந்த இளம் விக்கெட் கீப்பர்.

உலக சாதனையை சமன்

உலக சாதனையை சமன்

அடிலெய்டு டெஸ்டில் ஒரே டெஸ்ட் போட்டியில் 11 கேட்ச்கள் பிடித்து ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் ஜேக் ரஸ்ஸல் ஆகியோரின் உலக சாதனையை சமன் செய்தார். இந்திய அளவில் சாஹாவின் 10 கேட்ச்கள் சாதனையையும் முந்தினார். அதே போல இந்திய அளவில் ஒரே இன்னிங்க்ஸில் 6 கேட்ச்கள் பிடித்து தோனியின் சாதனையை சமன் செய்தார்.

தோனி இந்தியாவின் ஹீரோ

தோனி இந்தியாவின் ஹீரோ

இதற்கெல்லாம் தோனி தான் காரணம் என்பது போல பேசியுள்ளார் ரிஷப். "தோனி இந்தியாவின் ஹீரோ. ஒரு மனிதனாகவும், கிரிக்கெட் வீரராகவும் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன்" எனக் கூறி தன் புகழ் மாலையை தொடுக்க ஆரம்பித்தார் பண்ட்.

தோனி கற்றுக் கொடுத்தார்

தோனி கற்றுக் கொடுத்தார்

தோனியின் சாதனையை சமன் செய்துள்ள நிலையில், தோனி தான் தனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தார் எனக் கூறினார். "எனக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அவரிடம் தான் செல்வேன். அவர் அருகில் இருந்தாலே மிகவும் நம்பிக்கையாக இருக்கும்" என்று தெரிவித்தார் ரிஷப்.

பொறுமையாக இருக்க வேண்டும்

பொறுமையாக இருக்க வேண்டும்

ஒரு விக்கெட் கீப்பர் அழுத்தம் நிறைந்த நேரங்களில் பொறுமையாக இருக்க வேண்டும். நூறு சதவீதம் போட்டியில் கவனம் செலுத்த வேண்டும் என தோனி ரிஷப் பண்ட்டுக்கு அறிவுரை கூறியதையும் குறிப்பிட்டார் பண்ட்.

சாதனை முக்கியமல்ல

சாதனை முக்கியமல்ல

தனது சாதனைகளுக்கு தோனி தான் காரணம் என தன்னடக்கமாக பேசிய ரிஷப் பண்ட், சாதனைகள் வருவது மகிழ்ச்சி, ஆனால் அதை பற்றி எல்லாம் நான் நினைத்துக் கொண்டு இருப்பதில்லை என தெரிவித்தார்.

Story first published: Tuesday, December 11, 2018, 18:26 [IST]
Other articles published on Dec 11, 2018
English summary
India vs Australia : Rishab Pant says MS Dhoni is the Hero of the Country. He also tells he is learning from Dhoni.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X