For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோஹித் சதம் வீணாப் போச்சே!! இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்

சிட்னி : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.

எனினும், இந்தியா இந்த போட்டியில் தோல்வி அடைந்தது. ரோஹித்தின் சதம் வீணானது. அதே சமயம், ரோஹித்தின்

ஆரம்பமே அதிர்ச்சி

ஆரம்பமே அதிர்ச்சி

முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 288 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணி துவக்கத்திலேயே முக்கிய விக்கெட்களை இழந்து அதிர்ச்சி அளித்தது.

நிதான ஆட்டம்

நிதான ஆட்டம்

தவான் 0, கோலி 3, ராயுடு 0 என ஆட்டமிழந்து வெளியேற அனுபவ தோனி மற்றும் "ஹிட்மேன்" ரோஹித் ஆட்டத்தை தங்கள் கையில் எடுத்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். தோனி அரைசதம் அடித்து வெளியேறினார்.

போராடிய ரோஹித்

போராடிய ரோஹித்

ரோஹித் நீண்ட நேரம் களத்தில் நின்று தனியாளாக போராடினார். தன் 22வது ஒருநாள் போட்டி சதத்தை கடந்த ரோஹித் சர்மா 129 பந்துகளில் 133 ரன்கள் அடித்தார். ரோஹித் எத்தனை போராடியும் இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை. ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

அதிக சதம் அடித்த வீரர்

அதிக சதம் அடித்த வீரர்

ரோஹித் அடித்த சதம் மட்டுமே இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. இந்த சதம் மூலம் ரோஹித் சர்மா விவியன் ரிச்சர்ட்ஸ்-இன் சாதனையை முறியடித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் அதிக சதம் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்ட்ஸ்-இன் சாதனையை உடைத்துள்ளார் ரோஹித்.

விவியன் ரிச்சர்ட்ஸ் முதல் இடம்

விவியன் ரிச்சர்ட்ஸ் முதல் இடம்

ரோஹித் சர்மா இந்த போட்டியில் அடித்த சதம் ஆஸ்திரேலியாவில் அவர் அடிக்கும் நான்காவது சதம் ஆகும். முன்பு, விவியன் ரிச்சர்ட்ஸ் ஆஸ்திரேலியாவில் மூன்று சதம் அடித்ததே அதிகமாக இருந்தது. அவரை இரண்டாம் இடத்திற்கு தள்ளியுள்ளார் ரோஹித்.

கோலி இல்லையா?

கோலி இல்லையா?

ரோஹித் சர்மா இந்த சாதனையை செய்தார் என்றால் கோலி ஆஸ்திரேலியாவில் ஒருநாள் போட்டிகளில் எத்தனை சதங்கள் அடித்துள்ளார்? கோலி ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு சதம் அடித்துள்ளார். அவர் தவிர எட்டு வீரர்கள் இரண்டு சதம் அடித்து மூன்றாம் இடத்தில் இருக்கிறார்கள்.

கில்கிறிஸ்ட்-ஐ முந்தினார்

கில்கிறிஸ்ட்-ஐ முந்தினார்

மேலும், ரோஹித் சர்மா இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். முன்பு கில்கிறிஸ்ட் 1622 ரன்கள் அடித்து மூன்றாம் இடத்தில் இருந்தார். அவரை ரோஹித் முந்தி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். முதல் இரண்டு இடங்களில் சச்சின் (3077 ரன்கள்) மற்றும் ரிக்கி பாண்டிங் (2164 ரன்கள்) இருக்கின்றனர்.

Story first published: Saturday, January 12, 2019, 17:51 [IST]
Other articles published on Jan 12, 2019
English summary
India vs Australia : Rohit sharma beat Gilchrist and Vivian Richards records
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X