For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவரால் ஐபிஎல்-இல் ஆடவே முடியாது.. ரோஹித் சர்மா நிலைமை இதுதான்.. அதிர வைக்கும் உண்மை!

மும்பை : ரோஹித் சர்மாவை இந்திய அணியில் தேர்வு செய்யாதது குறித்து கடந்த சில நாட்களில் கடும் விமர்சனம் எழுந்து வந்தது.

அவரை வேண்டுமென்றே பிசிசிஐ மற்றும் விராட் கோலி ஓரங்கட்டி வைத்திருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், தற்போது அவரால் ஐபிஎல் தொடர் முடியும் வரை போட்டிகளில் பங்கேற்கவே முடியாது என கூறப்படுகிறது.

சுயநலம்.. வேண்டுமென்றே இப்படி செயல்படுகிறார்.. கேப்டன் ராகுல் மீது புகார்.. எதிர்பார்க்காத சர்ச்சை!சுயநலம்.. வேண்டுமென்றே இப்படி செயல்படுகிறார்.. கேப்டன் ராகுல் மீது புகார்.. எதிர்பார்க்காத சர்ச்சை!

புதிய விளக்கம்

புதிய விளக்கம்

மேலும், ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் நடக்கும் போது கூட முழு அளவில் காயத்தில் இருந்து மீள வாய்ப்பில்லை என்ற உண்மை வெளியாகி அதிர வைத்துள்ளது. அவர் பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோக்கள் குறித்தும் புதிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா காயம்

ரோஹித் சர்மா காயம்

2020 ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா சில நாட்கள் முன் இடது காலில் காயம் அடைந்தார். அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டு இருந்தது. அவர் அதன் பின் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

அணியில் நீக்கம்

அணியில் நீக்கம்

ஒருநாள் அணி, டி20 அணி மற்றும் டெஸ்ட் அணி என மூன்று அணிகளிலும் ரோஹித் சர்மா பெயர் இடம் பெறவில்லை. ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் அவரது துணை கேப்டன் பதவியில் கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டு இருந்தார்.

மும்பை இந்தியன்ஸ் வீடியோ

மும்பை இந்தியன்ஸ் வீடியோ

ரோஹித் சர்மா இந்திய அணியில் நீக்கப்பட்ட சில நிமிடங்களில் மும்பை இந்தியன்ஸ் அணி அவர் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியது. ரோஹித் சர்மாவின் காயம் பெரிதாக இல்லை என கூறுவது போல இருந்தது அந்த வீடியோ.

விரைவில் ஆடுவார்!?

விரைவில் ஆடுவார்!?

மேலும், ரோஹித் சர்மா விரைவில் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று ஆடுவார். அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் என மும்பை அணி வட்டாரம் கூறியது. இது பிசிசிஐ அவரது காயத்தை பெரிதுபடுத்தி அணியில் இருந்து நீக்கி இருப்பதை போன்று காட்டியது.

பிசிசிஐ மீது விமர்சனம்

பிசிசிஐ மீது விமர்சனம்

ரசிகர்கள் ரோஹித் சர்மா நீக்கத்தை அத்தனை எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பிசிசிஐ தேர்வுக் குழு மற்றும் விராட் கோலியை அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். ரோஹித் சர்மா அணியில் ஓரங்கக்கட்டப்படுவதாக குற்றம் சுமத்தினர்.

உண்மை இதுதான்

உண்மை இதுதான்

இந்த நிலையில், ரோஹித் சர்மா விவகாரம் குறித்து பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. அவரால் பேட்டிங் பயிற்சி செய்ய முடிந்தாலும் இயல்பாக ஓட முடியாது. அந்த அளவுக்கு அவரது காயம் உள்ளது என்ற உண்மை வெளியாகி உள்ளது.

ஐபிஎல் தொடரில் ஆடமாட்டார்

ஐபிஎல் தொடரில் ஆடமாட்டார்

ரோஹித் சர்மாவால் பீல்டிங் செய்ய முடியாது, மேலும் விக்கெட்கள் இடையே ரன் ஓடவும் முடியாது. அவரது காயம் ஐபிஎல் தொடர் முடிந்த பின் தன் குணமாகும் எனவும் பிசிசிஐ வட்டாரம் கூறி உள்ளது. அதனால் அவரால் ஐபிஎல் தொடரில் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய தொடர்

ஆஸ்திரேலிய தொடர்

ஐபிஎல் தொடர் முடிந்து சில வாரங்கள் கழித்து ரோஹித் சர்மா குணமடையும் பட்சத்தில் அவர் குவாரன்டைன் விதிகளுக்கு நடுவே ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், நவம்பர் 1 அன்று பிசிசிஐ அவரது காயம் குறித்து பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.

Story first published: Saturday, October 31, 2020, 17:33 [IST]
Other articles published on Oct 31, 2020
English summary
India vs Australia : Rohit Sharma will never play in IPL and Australia tour
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X