For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுவரைக்கும் இல்லாதவகையில அதிகமாக பார்க்கப்பட்ட போட்டி... 54% அதிக பார்வையாளர்கள்

டெல்லி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்து முடிந்துள்ள இறுதி டெஸ்ட் போட்டி அதிக பார்வையாளர்களை பதிவு செய்துள்ளது.

கடந்த 2018-19 தொடருடன் ஒப்பிடுகையில் 54 சதவிகிதம் பார்வையாளர்கள் இந்த போட்டியை பார்த்துள்ளனர்.

இந்த போட்டியின் இறுதி செஷனை மட்டுமே சராசரியாக 4,07,000 பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக பாக்ஸ்டெல் தெரிவித்துள்ளது.

India vs Australia series 2020-21 is the most watched Test series ever

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இறுதி டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கிடையிலான வெற்றியை நிர்ணயிக்கும் போட்டியாக அமைந்திருந்தது. இதையடுத்து பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் இந்த போட்டி அமைந்திருந்தது. இந்தியா இந்த போட்டியின் வெற்றி மூலம் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் வென்றது. வரலாற்று வெற்றியாக இது அமைந்தது.

இந்நிலையில் இந்த இறுதிப்போட்டி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளதாக பாக்ஸ்டெல் தெரிவித்துள்ளது. கடந்த 2018 -19 தொடரின் இறுதிப்போட்டியுடன் ஒப்பிடுகையில் 3,41,000 பார்வையாளர்கள் இந்த போட்டியை சராசரியாக பார்த்துள்ளனர். இது 54 சதவிகிதம் அதிகமான எண்ணிக்கை என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இறுதி செஷனை மட்டுமே 4,07,000 பார்வையாளர்கள் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளது.

Story first published: Friday, January 22, 2021, 15:43 [IST]
Other articles published on Jan 22, 2021
English summary
Fourth Test average audience for Fox Cricket of 341,000, up 54% on the 2018/19 Fourth Test v India
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X