ஸ்பெஷல் பீலிங்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் தமிழக வீரர்.. அந்த வைரல் ட்வீட்!

சிட்னி : இந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழக வீரர் டி நடராஜனின் ஒரு ட்வீட் வைரல் ஆகி வருகிறது.

இந்திய அணியின் புதிய ரெட்ரோ ஜெர்சியுடன் இருக்கும் அவர் அதை புகைப்படம் எடுத்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதில் இரண்டு விதத்தில் அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவரது பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

யார்க்கர் நடராஜன்

யார்க்கர் நடராஜன்

2020 ஐபிஎல் தொடரில் இந்தியா புதிய யார்க்கர் மன்னனை அடையாளம் கண்டது. அவர் தமிழக வேகப் பந்துவீச்சாளர் தங்கராசு நடராஜன். யார்க்கர் பந்துவீச்சால் சர்வதேச வீரர்களையும் மிரள வைத்தார். பேட்டிங் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ்-ஐ அவர் யார்க்கர் மூலம் பவுல்டு அவுட் ஆக்கியது இன்னும் பலரால் மறக்க முடியாத காட்சியாக உள்ளது.

அணியில் இடம்

அணியில் இடம்

இந்த நிலையில், அவருக்கு இந்திய டி20 அணியில் இடம் கிடைத்தது. தாமதமாக வந்தாலும், நீண்ட நாள் இந்த வாய்ப்புக்காக தவம் இருந்த நடராஜனுக்கு உரிய வாய்ப்பு கிடைத்தது. அவர் இந்திய வீரர்களுடன் ஆஸ்திரேலியா சென்றார்.

வாய்ப்பு கிடைக்குமா?

வாய்ப்பு கிடைக்குமா?

ஆஸ்திரேலியாவில் டி20 தொடரில் மற்ற வேகப் பந்துவீச்சாளர்களை தாண்டி அவருக்கு போட்டிகளில் பந்துவீச வாய்ப்பு கிடைக்குமா? என்பது தெரியவில்லை. எனினும், அவருக்கு ஒரு போட்டியிலாவது வாய்ப்பு அளிக்க வேண்டும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

புதிய ஜெர்சி

புதிய ஜெர்சி

இந்திய அணி இந்த முறை ஆஸ்திரேலியாவில் ரெட்ரோ உடை எனப்படும் 1992 இந்திய அணியின் பழைய உடையின் வடிவத்தில் ஜெர்சி அணிய உள்ளது. அந்த உடையுடன் இந்திய வீரர்கள் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகிறார்கள்.

வைரல் பதிவு

வைரல் பதிவு

நடராஜன் அந்த சிறப்பு ஜெர்சியுடன் போஸ் கொடுத்து செல்பி எடுத்து ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார். அந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. இதுதான் நடராஜன் அணியும் முதல் இந்திய அணி உடை என்பதால் அவர் இரட்டை மகிழ்ச்சியில் இருக்கிறார்.

கொண்டாடும் ரசிகர்கள்

கொண்டாடும் ரசிகர்கள்

பல ரசிகர்கள் இந்த உடையை அணிய தகுதி உள்ள வீரர் என நடராஜனை புகழ்ந்து வருகின்றனர். பலர் அந்த உடையில் அவர் சிறப்பாக இருப்பதாக பாராட்டி வருகின்றனர். சூப்பர்.. அப்படியே ஜெயிச்சுட்டு வாங்க என்று சிலரும் கூறி உள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
India vs Australia : T Natarajan shows up with new Indian team jersey
Story first published: Wednesday, November 25, 2020, 19:33 [IST]
Other articles published on Nov 25, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X